Thursday, October 26, 2006
குட்டைப் பாவாடைப் பெண்
பலத்த காற்றும், சிணுங்கும் மழையும், மரங்கள் சொரிந்த இலைகளை தெரு முழுவதும் இழுத்துக் கொண்டு திரிந்த அந்தக் குளிர்ந்த இரவில் அவள் அந்தத் தரிப்பிடத்தில் காத்திருந்தாள். பேருந்து நிற்க முன்னரே குட்டைப் பாவாடையுடன் பளிச்சென்று தெரிந்த அவளைக் கண்டு சில கண்கள் அகல விரிந்தன. பேருந்தினுள் அவள் ஏறியதும் ஒட்டு மொத்தப் பேரூந்துப் பயணிகளின் பார்வைகளும் அவள் பக்கம் ஒருதரம் திரும்பின. அவள் என்னைத் தாண்டும் போது "ஹலோ" என்ற படி அழகாகச் சிரித்துக் கொண்டாள். தாண்டிய பின்னும் தாண்டாமல் நின்ற, அவள் விட்டுச் சென்ற கமகமக்கும் உயர்தர வாசனைத் திரவியம் என்னுள் ஒருவித சந்தோச உணர்வைத் தோற்றுவித்தது.
ஆண்களில் சிலர் ஒரு தரம் அவளைத் திரும்பிப் பார்த்து விட்டு, எட்டாத கனி என்ற பாவனையுடன் அமைதியானார்கள். பெண்களில் கூடச் சிலர் திரும்பிப் பார்த்தார்கள். ஆடையின்றிய ஒரு பெண்ணின் முன் 100 வீதமான ஆண்களின் கண்களும் அகல விரிந்து கொண்டன என்று எங்கோ, எப்போதோ வாசித்த ஞாபகம். அதே புத்தகத்தில் இருந்த இன்னொரு செய்திதான் என்னுள் அதிகப்படி வியப்பை ஏற்படுத்தியது. ஆடையின்றிய பெண்ணின் முன் 80வீதமான பெண்களின் கண்களும் அகல விரிந்து கொண்டனவாம். குறிப்பாக பெண்களின் மார்பகங்கள் பெண்களையே வியக்க வைக்கின்றனவாம். இந்த செய்தி எந்தளவுக்கு உண்மையானது என்பதில் எனக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. ஆனால் இப்போது குட்டைப் பாவாடையின் கீழ் பளிச்சென்று தெரிந்த இவளது தொடைகள்தான் அந்த ஆண்களைத் திரும்ப வைத்தன என்றால், பெண்களை எது திரும்ப வைத்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.
நானே ஒரு மனிதஜென்மமாக இருக்கும் போது, சில சமயங்களில் நான் தள்ளி நின்று மற்றைய மனிதர்களைப் பார்த்து எனக்குள்ளே நகைத்துக் கொள்வேன். இன்றும் அப்படியொரு நகைப்பு எனக்குள். இந்த மனிதர்கள்தான் எவ்வளவு பலவீனமானவர்கள். நான் மட்டும் இதற்கொன்றும் விதிவிலக்கல்ல. ஆனாலும் இன்று கொஞ்சம் அதிகமான நகைப்பும், மனிதர்கள் பற்றிய ஆய்வும் எனக்குள்.
அந்தக் குட்டைப் பாவாடைப் பெண் பன்னிரண்டு வயதுகள்வரை எனது கடைசி மகனுடன்தான் படித்துக் கொண்டிருந்தாள். இப்போதுதான் எனக்குள் எப்படித் தொடர்வது, என்ற குழப்பமான சிந்தனை குறுக்கிடுகிறது.
அப்போது பல தடவைகள் எங்கள் வீட்டுக்கும் வந்திருக்கிறான். சில தடவைகள் எனது சமையலைச் சுவைத்தும் இருக்கிறான். கடைசியாக வந்த போது நான் ஸ்பக்கற்றியும் (spaghetti), தக்காளி சோஸ் ம் செய்து கொடுக்க, சீஸ் துருவலை அதற்கு மேலே தூவி தனக்கு மிகவும் பிடித்த உணவு என்று சொல்லிச் சந்தோசமாகச் சாப்பிட்டு விட்டுச் சென்றான்.
அதற்குப் பின் இருவருடங்களாக அவ்வப்போது வீதிகளில் மட்டுந்தான் நான் அவனைச் சந்தித்தேன். படிப்பில் சற்று பின் தங்கி வகுப்பேற்றப் படாமல் எனது மகனை விட ஒரு வகுப்பு கீழே நின்று விட்டான். பின்னொரு சமயத்தில் மகன் சொன்ன அந்தச் செய்தி என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. வெறுமே புத்தகங்களிலும், பத்திரிகைச் செய்திகளினூடுந்தான் பிறப்பிலே ஆணான ஒருவன் சத்திர சிகிச்சைகள் மூலம் பெண்ணாவது பற்றி அறிந்து வைத்திருந்தேன். இவனுக்கும் ஆணாக இருப்பதில் இஸ்டமில்லையாம். பெண்ணாகப் போகிறானாம்.
இதெல்லாம் எந்தளவுக்கு சாத்தியமாகும் என்ற சிந்தனை என்னுள் ஒருவித நம்பிக்கையீனத்தையே ஏற்படுத்தியிருந்தது. ஆனால் ஆகும் என்பதற்கு அறிகுறியாக, முதற்படியாக, முதல் முதலாக அவனை மேக்அப்புடன் பெண்ணுடையுடன் கண்டேன். அப்போதும் கூட முழுவதுமான நம்பிக்கை எனக்கு வரவில்லை.
இப்போது அவன் பெண். கண்டவர்களைச் சுண்டி இழுக்கும் படியாகக் கவர்ச்சியாக உடையணிந்து, கண்ணுக்கு மை தீட்டி, உதட்டுக்கு சாயம் பூசி... இந்தக் குளிருக்குள்ளும் கால்கள் பளபளக்கும் படியான காலுறை அணிந்து... இனி இவன் என்றோ, அவன் என்றோ நான் விழிக்க முடியாத படி இவளாகி விட்டவன்.
அவனுக்கு 18வயதான போது சத்திரசிகிச்சை செய்து முழுவதும் பெண்ணாக மாறிக் கொண்டான். அவன் உணர்வுகள் அப்படி இருப்பதால் அவன் மாறியே ஆக வேண்டும் என்று அவனது மருத்துவரே சிபாரிசு செய்ய, மருத்துவத்திற்கான சலுகைகளை முழுவதுமாகப் பெற்றுக் கொண்டு பெண்ணானான்.
இப்போது 24வயதுகள் ஆகி விட்ட இவளது முன் சரித்திரம் பலருக்கும் தெரியாது. இவள் வேலை செய்யும் சுப்பர் மார்க்கட்டில் இவளைத் தாண்டிச் செல்லும் ஆண்களில் பலர் இவளது புன்சிரிப்பில் தடுமாறுவதும் அடிக்கடி நடப்பதுண்டு.
இருந்தும் ஸ்ரெபான் ஆக இருந்து தற்போது ஸ்ரெபானி ஆகி விட்ட இவளது குடும்ப வாழ்க்கை எப்படி அமையப் போகிறது என்பது, எப்போதும் போல என்னிடம் கேள்விக் குறியே!
சந்திரவதனா
25.10.2006
Subscribe to:
Post Comments
(
Atom
)
Followers
Blog Archive
-
►
2024
(
11
)
- ► March 2024 ( 1 )
- ► January 2024 ( 1 )
-
►
2017
(
21
)
- ► August 2017 ( 1 )
-
►
2016
(
23
)
- ► November 2016 ( 5 )
-
►
2015
(
28
)
- ► March 2015 ( 6 )
-
►
2013
(
10
)
- ► December 2013 ( 1 )
- ► October 2013 ( 1 )
- ► September 2013 ( 1 )
-
►
2012
(
7
)
- ► November 2012 ( 1 )
- ► August 2012 ( 1 )
-
►
2011
(
7
)
- ► December 2011 ( 1 )
- ► November 2011 ( 1 )
- ► August 2011 ( 1 )
- ► April 2011 ( 1 )
- ► March 2011 ( 1 )
-
►
2010
(
10
)
- ► November 2010 ( 1 )
- ► March 2010 ( 1 )
-
►
2009
(
27
)
- ► October 2009 ( 1 )
- ► September 2009 ( 5 )
-
►
2008
(
38
)
- ► January 2008 ( 1 )
-
►
2007
(
46
)
- ► December 2007 ( 1 )
- ► September 2007 ( 8 )
- ► August 2007 ( 1 )
-
▼
2006
(
137
)
- ▼ October 2006 ( 15 )
- ► September 2006 ( 25 )
- ► August 2006 ( 21 )
- ► April 2006 ( 12 )
- ► March 2006 ( 9 )
- ► February 2006 ( 7 )
-
►
2005
(
172
)
- ► December 2005 ( 12 )
- ► November 2005 ( 25 )
- ► September 2005 ( 9 )
- ► August 2005 ( 7 )
- ► April 2005 ( 13 )
- ► March 2005 ( 15 )
- ► February 2005 ( 37 )
-
►
2004
(
172
)
- ► December 2004 ( 7 )
- ► November 2004 ( 10 )
- ► October 2004 ( 11 )
- ► September 2004 ( 13 )
- ► August 2004 ( 24 )
- ► April 2004 ( 23 )
- ► March 2004 ( 11 )
- ► February 2004 ( 7 )
-
►
2003
(
36
)
- ► November 2003 ( 11 )
- ► October 2003 ( 7 )
- ► September 2003 ( 8 )
- ► August 2003 ( 6 )
10 comments :
hmm
இது ஒரு உளவியல் சம்மத்தப்பட்டது.. அதாவது பிறப்பால் ஆனாக இருந்தும் மணதலவில் பெண்னாக இருப்பதைக்குறிக்கும், பிழையான ஒரு உடம்பில் பிறந்துவிட்டதாக (சிறு, அனேகமாக பருவ வயது முதற்கொண்டு) இவர்கள் உனர்வார்கள்.. தற்கொலைக்கு கூட சில வேளைகளில் முயற்சி செய்ய முற்படுவார்கள், இவர்கள் அறுவை சிகிச்சை மூலம் பெண்னாக மாறுவதுதான் நல்லது! ஆனால் இவர்களாள் குழந்தைகளை பெற முடியாது.சுற்றத்தார் அனுசரித்து போனால் இவள் நிச்சயம் சாதாரன பெண்னாக வாழ முடியும்.
உடல் அளவில் ஆண்/பெண்னாக இருப்பவர்கள் ஆனால் மனதளவில் பெண்/ஆண்னாக இருப்பவர்களை transsexuell என அழைப்பர். இவர்களும் homosexuellலும் சமன் அல்ல!
நீங்கள் அவளை அடுத்த முறை கானும் போது நிச்சயமாய் அவளேடு கதையுங்கள், அவளைப்பற்றி விசாரியுங்கள் எல்லாருடைய அங்கிகாரமும் இவர்களுக்கு தேவை(அனுதாபம் இல்லை).
//ஆடையின்றிய பெண்ணின் முன் 80வீதமான பெண்களின் கண்களும் அகல விரிந்து கொண்டனவாம். குறிப்பாக பெண்களின் மார்பகங்கள் பெண்களையே வியக்க வைக்கின்றனவாம். இந்த செய்தி எந்தளவுக்கு உண்மையானது//
வியக்கவைக்க அகல திறக்கலைங்க....பொறாமையிலை குமைஞ்ச அகல திறப்புங்க...
இப்படி, நானும் அறிந்த ஒருவவைப் பற்றி முதல் எழுதியிருக்கிறேன்.
இவர்கள் புதினமானவர்களல்ல என்பதும் இவர்களை உள்ளபடியே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதுமே என்கருத்து.
ஆக மொத்ததில் சில ஆண்களும் சில பெண்களும் மேய்ச்சல் விலங்குகளாகத்தான் திரிகின்றனர் எங்கிறீர்கள். அந்த வகையில் பார்க்கும் போது நீங்களும் மேய்ஞ்சிருக்கிறீர்கள். ஏனென்றால் அவனவன் வேலைக்கு படிப்புக்கு போற ரென்சனில தன்னையே கவனிக்க முடிவதில்லை உங்களுக்கெல்லாம் இதுகளுக்கும் நேரமிருக்கே அதுதான் இப்படியும் எழுதச் சொல்லுது.
அவள் குட்டையா போட்டால் என்ன ஏன் போடாமல் போனால் தான் என்ன அவளிடமும் மனிதனிடம் உள்ளதுதான் இருக்கிறது. தோலும் தசையும் எலும்பும். பிறகென்ன பார்வை வேண்டி இருக்கிறது. ஏதோ இறைச்சிக் கடையில் இறைச்சியைப் பார்ப்பது போல பெண்ணின் ஆடை அங்கமென்று பார்க்காட்டிலும் பார்த்துத் திரியும் சிலர் எழுதும் விரசத்தனமான அவர்களின் சிந்தனைகள் பார்க்காதவர்களையும் விரசத்தனமாக சிந்திக்க வைகாதவர்களையும் சிந்திக்க வைத்துவிடும். அதுதான் நடக்கிறது பல எழுத்துக்களிலும். தனி நபர்களின் விரச சிந்தனைகள் எழுத்துக்களின் மூலம் பிறருக்கு என்றாக்கப்பட்டு சமூகத்துக்கு என்று படைக்கப்பட்டு விடுகிறது. நீங்கள் மட்டுமல்ல பல நாவல் சிறுகதை எழுத்தாளர்கள் கூட கொஞ்சம் தங்கள் சிந்தனைகளை தாங்களே சிந்திப்பதாகக் காட்டிக் கொண்டால் நல்லது. வெறுமனவே இன்னொரு கதாப்பாத்திரத்தைப் புனைந்து தங்கள் விரசங்களை அதில் கொட்டி சமூக உதாரணமாக்குவதைத் தவிர்ப்பது நல்லம்.
உலகியலில் நீங்கள் இருக்கும் படி அடி மட்டம் என்பது எமது பார்வையில் தெரிகிறது. இன்று ஒரு குட்டைப் பாவாடைக்காக ஒரு பெண்ணைத் திரும்பி ஜொள்ளு விடும் அளவுக்கு ஆண்களில் பலரில்லை. ஜொள்ளுவிட அவளிடமும் எதுவும் இல்லை. ஏதோ இருப்பது போல புனைபவர்கள் தான் அதில் என்ன இருக்கிறது என்று விரிவாக எழுதிவிடுங்களேன்.
இசைவாக்கம் என்ற ஒன்று அறிந்திருப்பீர்கள். ஒன்றுக்கு ஒரு சூழலுக்கு பழகிவிட்டால் அந்தச் சூழலில் நிகழும் சிறிய மாற்றங்கள் எல்லாம் கண்ணிற்கு உணர்வுக்குப் புலப்படாது. வாழும் சூழலில் குட்டைப்பாவாடை என்ன அங்கிகள் பலவகை. ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி. இன்னும் குட்டைப் பாவாடையைக் கண்டால் பார்க்க வேண்டும் போல இருப்பவர்கள் ஒன்று செய்யுங்கள் வீட்டில் சில குட்டைப்பாவாடைகளை வாங்கித் தொங்கவிட்டு பார்த்திட்டே இருங்கள். அப்புறம் கண்ணும் உணர்வும் பழக்கப்பட்ட பின் வெளியில் கிளம்பித் திரிந்தாலும் கண் குட்டைப்பாவாடையைத் தேடாது.
பெண்களைத் தேடுது என்பீர்கள். பேசாமல் மெழுகு பொம்மைகளை வாங்கி வைத்துப் பாருங்கள். அதைவிடுத்து ஏதோ ஆண்களும் பெண்களும் வேலை மிணக்கட்டு குட்டைப் பாவாடையோட போறவளை பார்த்திட்டு ஜொள்ளு விட்டிட்டுத் திரியினம் என்பது போலவும் அதை அவதானித்து எழுதுவது போல நீங்கள் ஜொள்ளு விடுவதை நசூக்கா மற்றவர்கள் மீது காட்டி உங்களை விமர்சகர்களாக்கி பெருமைப்படுத்திக் கொள்கிறீர்கள்.
எங்கள் பார்வையில் எழுத்தாளர்கள் சிலரே படு ஜொள்ளுப் பேர்வழிகள். அவர்களும் அவர்களின் எழுத்தும் அதற்குச் சான்று. குறிப்பாக நாவல் எழுத்தாளர்கள்.
ஒரு பெண்ணை ஒரு ஆண் பார்ப்பதை விபரிக்கும் பாணி..கடவுளே அப்படி ஒரு பெண்ணைப் பார்க்கக் கூட அவனுக்கு அந்த நாவலைப் படிக்கும் வரை தெரிந்திருக்காது.
எனவே சமூகத்துக்கு எழுத்தாளர்கள் படைப்பாளிகள் என்று கொண்டு தங்கள் குப்பைத் தனங்களைக் குப்பை என்று கொட்டாமல் உங்களுக்குள் உள்ள உணர்வுகளை அப்படியே கொட்டிகொண்டிராமல் சமூகத்தின் உளப்பாங்கு குறித்து சிந்தித்தும் சிலாகித்தும் விசாரித்தும் விளங்கியும் எழுத முயலுங்கள்
உங்கள் எழுத்துக்கள் தவறான உதாரணங்கள் ஆகிவிடக் கூடாது.
உங்களுக்கு மட்டுமல்ல ரமணிச்சந்திரன் மண்ணாங்கட்டிச் சந்திரங்களுக்கும் வெறும் வியாபார நோக்கில் ஆண்களின் பெண்களின் பார்வைகளை உணர்வுகளை விரசமாக்கி கதைகள் புனைந்து உங்கள் கற்பனைகளின் விரசங்களை விற்பனை செய்து புகழீட்டுவதை பணமீட்டுவதை நிறுத்தி சமூகத்துக்கு சரியான வகையில் விடயங்களைச் சொல்ல முனையுங்கள்.
அநேக எழுத்தாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அவ்வளவு நல்லதாக இல்லை. கண்ணதாசன் தொடங்கி கலைஞர் கருணாநிதி ஊடாக எல்லாம் ஒருவகை பெண்
மனனோய் உள்ள ஆண் படைப்பாளிகள் என்றால் பெண்களோ பெண் ஆண் என்று பல மனனோய்களின் தாக்கத்தில் எழுதுவதெல்லாம் கதாபாத்திரமாக சமூகத்தில் விதைக்கபப்ட்டு அப்பாவித்தனமான பார்வைகள் கூட பாழ்படும் படியான சிந்தனைகள் விதைக்கப்படுகின்றன.
உதாரணத்துக்கு மனிதனில் உள்ள உறுப்புக்களை கவர்ச்சிக்கான அம்சங்களாகக் காட்டுதல். பல நாவல்களை படித்தால் பெண்களின் மேலாடைகளை ஆண்களின் பார்வைக்குரிய பகுதியாக சித்தரித்திருப்பார்கள். பொதுவாக நாவல்களோ கதைகளோ படிக்காத எம் போன்றவர்களுக்கு ஆகா என்ன அழகான நிற ஆடையது என்று அழகை ரசிக்க கூட முடியாத அளவுக்கு அண்மையில் ஒரு நாவலை வாசிக்க வேண்டிய கட்டாயத்தில் வாசித்த போது ஐயோ இப்படியும் எழுதுகிறார்களே என்றாச்சு. அதன் பின்னர் பெண்களின் ஆடைகளின் அலங்காரத்தைக் கூட கண்கொண்டு பார்ப்பது கூச்சமாக இருந்தது. ஆனால் அது அந்த விரசங்களின் பார்வைதான் என்று சிந்திக்க விட்டு எங்களை அதிலிருந்து விடுவிக்க முனைந்தாலும் அந்த வாசிப்பு விதைத்த சிந்தனை விலகிடுமா எனி மனதை விட்டு.
எனவே எழுத்தாளன் படைப்பாளன் என்பவன் கல்லாக உள்ள குழந்தைகளை மனிதர்களை சிலையாக்கும் சிற்பி. அவன் தனது வக்கிரங்களை எழுத்துக்களில் விதைத்து சிலைகளையும் வக்கிரமாக்க நினைக்காமல் மனதோடு கீழ்த்தரமான சிந்தனை ஓட்டங்களை ஓட விடாமல் மனிதனுக்கு உடலங்கங்கள் எல்லாம் பொது. ஆடைகளில் என்ன இருக்கிறது. வெறும் தோலும் தசையும் தெரிவதால் என்ன அழகு. என்று நோக்கி சிந்தனைகளை ஒரு வக்கிரமற்ற மனிதனை மனிதனாகப் பார்க்கும் நிலைக்கு கொண்டு வர முயலுங்கள். ஆணைப் பெண்ணும் பெண்ணை ஆணும் அழகை ரசிப்பது வேறு. அந்த அழகுணர்ச்சிக்கு அர்ந்தம் புரியாத சில எழுத்தாளர்கள் அதை அலங்கோலனாக்கி வக்கிரத்தனமான பாதையில் இட்டுச் செல்கின்றனர். குறிப்பாக குழந்தைகள் சிறுவர்கள் மனதில். சந்திரவதனா போன்றவர்கள் தங்கள் இப்படியான படைப்புக்களை வலைப்பூவில் வெளியிடும் போது தயவுசெய்து 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என்று வரையறையிட்டு அவர்கள் மட்டும் பார்க்கக் கூடிய அளவுக்கு வெளியிடுங்கள்.
இன்று பிள்ளைகள் பெண்ணின் ஆணின் ஆடைகளை விரசத்தோடு பார்க்கும் நிலையில் இல்லை. சகஜமாக ஏய் உன்ர ரெஸ் ரெம்ப ஜோரா இருக்கு என்று கள்ளம் கபட மற்று அழகை விமர்சிக்கும் பாங்குக்குள் தயவு செய்து உங்களின் விரசத்தனமான வக்கிரத்தனமான சிந்தனைகளைப் புகுத்தி அவர்களி அழகை ரசிக்கும் அந்த மெல்லிய மனதோடு எழும் அப்பழுக்கற்ற நல்ல ஒரு சிந்தனைக்கு மனிதனில் உறங்கும் மிருக்கத்தனமான விரசச்சாயம் பூசி புகழ் பணம் தேடாதீர்கள்.
நன்றி.
I will totally have to disagree with மாயோன் . I have never heard or read something so ridiculous in my life. When I Started reading Mayoons comments I first shaked my head and then I became more and more furious and finally I just felt sorry for him/her. I must say this person must be leading a very bitter life.
So, are you telling us just because someones’ attention is attracted in a positive or negative way to someone else that person is worthless? I don’t know what kind of world you live in but it is just human nature to appreciate something beautiful or give attention to something you dislike. Even when one sees someone who is deformed one would turn and look. That does not mean that that person has nothing better to do. Its just the normal human brain which is interested and strikes when something nice or bad appears in front of him/her. You telling me you never admired a beautiful flower in the fields, or a gorgeous baby in its mothers arms, or even an elderly couple? I could go on about things I admire and times I turn to look at something I shouldn’t have. I tell you something, I have been brought up by very well educated parents and am a professional, which means I have studied very hard and I go to work, but I still had time to look around and enjoy my life and appreciate the beauty around me. That doesn’t make me someone worthless it just makes me human! A happy Human!
To tell the truth I have lots to say to you but I don’t think that it is necessary. I am sure all the other readers (at least most of them) feel the same way as I feel. So I am not going to go into details and comment on each of your comments. But I would just like to say one thing: Criticising someones work is fine but in my opinion you have gone beyond it! You just offended the writer and nearly 99% of the human beings in this world. You seem to be rather bitter about something in your life and I am very sorry about that, but I don’t think there is any need to tell someone to buy a doll or miniskirts to satisfy their needs. I think that is very rude and offensive! And by the way, I doubt that this is what Ms Chandravathana tried to bring across. From what I understood she was very confused about the whole thing and tried to analyse it. I ones read an article in a magazine my wife reads (Cosmopolitan) that it is not just men but also women who turn around to look at other women, attractive or not attractive, apparently that is how human brains and reflects work. And my wife agreed that she has several time turned and looked. And many of my other friends and their wife’s have told me that too. So what Ms Chandravathana wrote is not what someone desperate does but it is in human nature.
I have read many of Ms Chandravathanas articles and I must say I rather enjoy them a lot. I have never posted any comments so far and quietly enjoyed her stories and discuss it with my wife. Sometimes similar things would have happened to me or my wife and we would discuss it in depth. It even sometimes leads into very interesting conversations with my colleagues, because what she writes about is what happens in reality and at least one person has been through it or faced a similar situation. Ms Chanravathana, don’t let people like this discourage you! Please continue with your wonderful work. I find your stories very interesting and sometimes even soothing. I am looking forward to more of it.
I hope you don’t mind that I wrote in English, but even though I can read or understand Tamil very well I cannot express myself well enough in Tamil as I was brought up in the UK.
Thank you,
Dr. S. Pasupathi
ஜய்யோ ஐய்யோ....பறவைகள் குருவிகள்... எல்லா இடத்திலும் எச்சம் போட்டதுகள்... சந்தரவதனக்கா வின்ரை பதிவிலும் மாயமாய் எச்சில் போட வந்திட்டுதுகள் போலை
நல்ல பதிவு சந்திரவதனா...
இது போல பலர் இப்பொழுது தங்களின் பாலின நிலையை தைரியமாக வெளி உலகுக்கு தெரியப்படுத்துகின்றனர்..
மாயோன், ஏன் எழுத்தார்களை சாடுகிறார் என்று தெரியவில்லை.. உலகில் நடக்கும் விஷயங்கள் அவருக்கு தெரியாதா.... சந்திரவதனா சொல்ல வந்த விஷயம் என்ன.. இவர் புரிந்து கொண்டதென்ன??
டாக்டர் அவர்களே உங்களின் மென்ராலிற்றியே சொல்கிறது உங்களின் எழுத்திற்கும் இந்த ஆண் பெண் அங்கங்களை ஆடைகளை வக்கிரமாக்க சித்தரிக்கும் எழுத்தாளர்களுக்கும் உள்ள ஒற்றுமை.
உங்கள் மென்ராலிற்றியையே உதாரணமாகக் கொள்வோம்.
ஒரு பூவை ஒரு இயற்கையை ஏன் ஒரு பெண்ணின் ஆணின் அழகை ரசிப்பது என்பது வேறு.மனிதனின் அங்கங்களை விரசத்தனமான சிந்தனையோடு விபரிப்பது என்பது வேறு.
ஒரு மனிதப் பெண் தன் தந்தையைப் பார்க்கும் பார்வைக்கும் கணவனைப் பார்க்கும் பார்வைக்கும் உள்ள வேறுபாடு போன்றது அது. விலங்குகளைப் பொறுத்தவரை இந்த பகுத்தறிவுத்திறன் இருப்பதில்லை. மனிதரின் மூளைக் கட்டமைப்பு அதற்கேற்ப கூர்ப்பின் வழி சிறப்படைந்துள்ளது.
கற்கால மனிதனின் மூளைக்கும் தற்கால மனிதனின் மூளைக்கும் இடையிலான கட்டமைப்பு வேறுபாடுகள் தொழிற்பாட்டு வேறுபாடுகள் என்ன? அவற்றைப் பட்டியலிட்டு கூர்ப்பின் பாதையின் அவற்றின் மாற்றமும் மனித நாகரிக வளர்ச்சியும் பற்றி கொஞ்சம் எழுதினீர்கள் என்றால் நீங்கள் இட்டுக்கொண்ட டாக்டர் என்ற அந்த வரிகளுக்கு உபயோகமாக இருக்கும். ( நீங்கள் ஒரு மருத்துவராக இருப்பின்)
இரண்டாவது முக்கியமான விடயத்துக்கு வருவோம்...
உங்களின் கருத்தை நிலைநாட்ட நீங்கள் கையாண்ட சமூகத்தின் மூடத்தனத்தைக் பாவிக்க விளைந்த விதத்தை இங்கு காட்டுகிறோம் பாருங்கள்.
நீங்கள் ஒரு டாக்டர்.உங்கள் பெற்றோர் புறவெசனல் லெவலில் உள்ளவர்கள்? நீங்கள் கடுமையாகப்படித்து பட்டம் பெற்று வேலை செய்து களைத்துப் போயினும் அழகை ரசிப்பவர்.
நீங்கள் அழகை ரசிக்கவும் டாக்டராக இருப்பதற்கும் என்ன தொடர்பு? நீங்கள் பெற்ற டாக்டர் பட்டம் தந்த அறிவு மூளையில் அழகை ரசிக்கும் பகுதியில் ஏதாவது மாற்றத்தை தந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா?
உங்கள் பெற்றோர் புறவெசனல் லெவலில் இருப்பதற்கும் நீங்கள் கடுமையாகப்படிப்பதற்கும் உள்ள தொடர்பு என்ன? உங்கள் வாதப்படி புறவெசனல் லெவலில் உள்ள பெற்றோரின் பிள்ளைகள் கடினமாகப் படிப்பார்கள். டாக்டர் பட்டம் பெறுவார்கள். கடின வேலை செய்வார்கள். அழகையும் ரசிப்பார்கள். ஆனால் இத்தனையும் செய்யத் தெரிந்த அவர்களுக்கு அழகுக்கும் பாலியல் சிந்தனைகளுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை உணர முடியாமல் போனது துரதிஷ்டமே.
பாருங்கள் மூளை பற்றிக் கதைக்க வந்த நீங்களே ( நீங்கள் மருத்துவத்துறை சார்ந்த டாக்டரா இல்ல ஏதாவது ஆராய்ச்சி செய்து வந்த டாக்டரோ தெரியவில்லை) மூளையின் அடிப்படை கட்டமைப்பு செயற்பாடு குறித்து விளக்கமில்லாமல் தேவையற்று நீங்கள் படித்துப் பெற்ற துறைசார் பட்டத்தையும் பெற்றோரையும் வேலையையும் இதற்குள் கொண்டு வந்திருப்பதாகவே நாம் உணர்கின்றோம்.
நாங்கள் டாக்டர் அல்ல. எங்கள் பெற்றோர் புறவெசனல் லெவலில் இல்லை. நாங்கள் கடினமாகப் படித்தோம் என்று தம்பட்டம் அடிக்கும் நிலையிலும் இல்லை. கடுமையான வேலை செய்கின்றோம். நாளுக்கு 12-14 மணி நேரம் வேலை செய்கின்றோம். அதுவும் உடம்பு வருந்த வேலை செய்கின்றோம்.
நீங்கள் ஒரு மருத்துவரானால் இந்த நீண்ட உழைப்பு உடலின் அடிப்படைக் கட்டமைப்புகளான கலங்களில் இருந்து மூளையின் இரசாயனம் வரைக்கும் என்னென்ன தாக்கங்களைத் தரும் என்று விளங்கிக் கொள்வீர்கள். அதை உங்களிடமே விடுகிறோம் சிந்தனைக்கு. நீங்கள் தான் அதிகம் படித்த ஆளாச்சே சிந்தியுங்கள் முடிவெடுங்கள்.
இவ்வளவு கடின வேலையைச் செய்து விட்டு வீடு திரும்பும் வழியில் அழகை ரசிக்க முடியும் என்று நீங்கள் வாதம்புரிவீர்கள் என்றால் உங்களுக்கும் சந்திரவதனாவுக்கு அடிப்படையில் அறிவு மட்டம் ஒன்றே.
இசைவாக்கம் குறித்து நாம் சொன்னதில் நீங்கள் தெளிவாக முரண்பட்டீர்களோ என்று புரியவில்லை. ஆனால் சிறிய உதாரணம். நீங்கள் வதிக்கும் லண்டனுக்கு வந்த அனுபவம் நமக்கும் உண்டு. அங்கு வீதியில் நிற்கும் புறாக்கள் நடைபாதையில் போவோர் அருகில் வந்தாலும் எழும்பிப் பறக்கா. ஆனால் இதையே நீங்கள் வயற்புறத்தில் உள்ள புறாக்களிடத்தில் போய் நடந்து பாருங்கள். அவை காணமுன்னே பறந்துவிடும்.
இதில் நீங்கள் மூளையின் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை என்று சொல்வீர்களா?
மனிதனில் பாலுணர்வுத் தூண்டல் என்பது இடைவெளியற்ற ஒன்று. குறிப்பாக அவனுடைய பருவ வயதில். பாலுணர்வுத் தூண்டலுக்கும் அழகுணர்ச்சித் தூண்டலுக்கும் இடையில் வேறுபாடு காட்டுகின்றோம் பாருங்கள்.
ஒரு 5 வயதுச் சிறுவன் அழகுணர்ச்சியால் தூண்டப்படுவான். ஆனால் அவனில் பாலுணர்வுத் தூண்டல் இருக்காது. சிறிய வயதில் பாடித்திருந்த சினிமாப் பாடல் வரிகளை இன்று நினைக்கும் போது அடச் சீ இவற்றையா பாடித்திருந்தோம் என்றிருக்கிறது. இன்று அதற்கு பல வேறு அர்த்தங்கள் இருப்பதை மூளை உணரும் நிலைக்கு சமூகம் கொண்டு வந்துவிட்டிருக்கிறது.
அது வீட்டுச்சமூகமாக இருக்கட்டும். பாடசாலைச் சமூகமாக இருக்கட்டும் அல்லது வெளிக்களச் சமூகமாக இருக்கட்டும். அதுவே ஒரு குழந்தைக்கான மூளைக்குரிய அடிப்படைத் தகவல்களை வழங்கி பதிய வைக்கிறது.
உதாரணத்துக்கு ஒரு ஆய்வு முடிவைக் கூறலாம். ஒரு குட்டி நாய்க்கு தினமும் மணி அடித்ததும் சாப்பாடு இட்டு வருவதை வழமையாக்கிக் கொண்டனர். அது வளர்ந்து பெரிய நாயான போது சில தினங்கள் மணி அடிக்கவே அது வழமையாக சாப்பாடு இருக்கும் இடத்துக்கு ஓடி வந்து விடும். ஆனால் சாப்பாடில்லாத போதும் வாயில் நீரூற காத்திருக்கும். இதையே ஒரு தெரிவில் உள்ள நாய்க்கு மணி அடித்து வாயில் நீரூறச் செய்ய முடியுமா?
இங்கு நடத்தை இசைவாக்கம். நிச்சயம் இதில் மூளையின் பங்களிப்பு கணிசமான அளவு உண்டு.
இதே போன்றதே எழுத்தாளர்களின் முன்னிலையில் சமூகத்தின் குழந்தை பிள்ளை சிறுவன் வாலிபன் முதியவன் என்று பல ரக மக்கள் உள்ளனர்.
எழுத்தாளனின் சிந்தனை என்பது ஆழ்ந்திருக்கிறதோ இல்லையோ பரந்திருக்க வேண்டும். வெறும் பெண்ணின் உடலங்கத்தைப் பற்றிக் கதைக்கும் போது ஏன் குறிப்பிட்ட சில அங்கங்களைப் பற்றிக் கதைப்பது மட்டும் விசேடமாக நோக்கப்படுகிறது.
ஆபிரிக்க ஆதிக் குடிவாசிகள் பற்றி ஒரு ஆய்வு விபரணம் ஒன்றை ஒரு ஆய்வின் நோக்கம் பார்க்க நேர்ந்ததில் அங்கு ஆண்கள் பெண்கள் ஆதி மனிதர்கள் போல உடையுடுத்தாமல் இருந்தனர். அவர்களிடையே சாதாரணமான அணுகுமுறைகளையே காண முடிந்தது.
அந்தச் சூழலில் சந்திரவதனா போன்ற எழுத்தாளர்களை அனுமதித்தால் அவர் அவர்களின் வாழ்க்கை முறையை அவதானிப்பாரோ தெரியாது அவர்களின் அங்கங்களை அதுவும் இரண்டாம் நிலைப் பாலுறுப்புக்களை பார்த்து ஜொள்ளு விட்டுக் கொண்டிருப்பார்.
நல்ல வேளை சந்திரவதனா இப்படியான ஆய்வுகள் எதற்கும் செல்லவில்லை என்று நினைக்கின்றோம்.
ஆக டாக்டர் அவர்களே ஒரு மனிதனின் கருத்துக்கு உங்களின் டாக்டர் பட்டம் சொல்லும் அர்த்தம் அவனின்/அவளின் கசப்பான வாழ்பனுபவமே என்று. இச்சூழலில் உங்களுக்கு டாக்டர் பட்டம் இத்துறைக்கு தரப்பட்டிருப்பின் அதைப் பறிக்க நாம் பரிந்துரைக்க முடியும். காரணம் எம்மைப் பொறுத்தவரை நாம் ஆண் பெண் நடத்தையியல் அல்லது சமூகவியல் கசப்புணர்வு என்று எதையும் அனுபவிக்கவில்லை. அப்படி அனுபவிக்கக் கூடிய சூழல் இன்னும் எழவில்லை. இப்போ நீங்கள் எழுதிய பின்னர்தான் அதென்ன கசப்புணர்வுகள் என்ற தேடல் உதித்திருக்கிறது.
இதைத்தான் சந்திரவதனா போன்ற எழுத்தாளர்களையும் நோக்கிச் சொல்கின்றோம். மனித உறுப்புக்களைக் கவர்ச்சிப் பொருளாக்குவதும் பாலுணர்வு விடையங்களாக்குவதும் இயற்கையைக் காட்டிலும் வக்கிரமான எழுத்துக்களே மோசமான நிலைக்கு இட்டுச் செல்கின்றன்.
இயற்கை ஒரு கால அளவு வைத்திருக்கிறது எதற்கும். ஒரு எல்லை இடப்பட்டிருக்கிறது. ஏன் பிறந்த உடனேயே பாலுணர்வு தூண்டப் பிறக்கச் செய்யவில்லை. ஏன் வயோதிபம் ஆனது பாலுணர்வு குறைகிறது. ஏன் பெண்களுக்கு 45 - 50 வயதில் இனவிருத்திக்கான இயல்பை இயற்கை பறிக்கிறது? பாலுணர்வுக்கு இயற்கையே கட்டுப்பாடு விதிக்கும் போது ( அதற்கும் உயிரியல் காரணங்கள் இருக்கலாம்) குழந்தைக்கும் உரிய அழகுணர்ச்சி என்ற அற்புதமான நித்தியமான மன மகிழ்வுக்குரிய விடயத்துள் பாலியல் வக்கிரத்தனமான சிந்தனைகளையும் ஏதோ பெண்களின் ஆண்களின் உடலுறுப்புப் பற்றிப் பேசுவது தவறாக நோக்கப்படுகிறது அதை நாம் தகர்கிறோம் என்று எழுத்தாளர்கள் தங்களளவில் வைத்திருக்கும் கீழ்நிலைப்படுத்தப்பட்ட சிந்தனையியலுக்கு சமூக முற்போக்கு என்று விளக்கம் அளிக்காமல் நாம் குறிப்பிட்டமே அந்த ஆபிரிக்க ஆதிவாசிகள் போல சகஜமாக்கிக் கொள்ளுங்கள்.
பாலுணர்வைத் தூண்டும் வகையில் சில மனித அங்கங்களை விமர்சிக்காமல் அதை மற்றைய அங்கங்கள் போல பாருங்கள்.
அப்படிப் பார்பின் குட்டைப்பாவாடை என்ன எதுவுமே கவனத்தை சுண்டி இழுக்கும் விசயமாக அல்லது ஆணைப் பெண்ணை நிர்வாணமாக்கி கண்களை அகலவிரிக்கும் விடயமாக இருக்காது.
சந்திரவதனா தன் பேரக்குழந்தைகளை குளிப்பாட்டும் போது கண்களை அகல விரித்தா பார்கிறார். அதே போலவே வளர்ந்தவர்களையும் விமர்சிக்கப் பழகுங்கள். அதுவே அநாவசிய வக்கிர சிந்தனைகள் சமூகத்தில் விதைக்கப்படாமலும் பாலிய வயதில் பிள்ளைகள் தவறான பாதையில் செல்லாமலும் இருக்க வகை செய்யும். அதை வலியுறுத்துவதே எமது நோக்கம். அன்றி சந்திரவதனாவின் படைப்புக்களைக் குறை கூறுவதில் இல்லை.
டாக்டர் அவர்களே நீங்கள் டாக்டர் ஆனதே வேஸ்ட். சந்திரவதனாவின் பல ஆக்கங்களைப் படித்து வரும் நாம் ஏன் இதில் கருத்துப் பகிர்ந்தோம் என்று கூட உங்களால் நோக்க முடியாது இப்படியான கருத்துக்களால் துவண்டுவிடாதீர்கள் என்று எங்கள் கருத்தை சந்திரவதனாவுக்கு எதிரான கருத்தாக்க முனைந்ததில் உங்கள் அறிவுக்கும் வேலையே இல்லாமல் போய்விட்டது. இதில் உங்களின் பாட அறிவிலும் நீங்கள் உங்கள் சமூகத்திடமிருந்து பெற்ற அறிவே அதிகம் செல்வாக்குச் செலுத்தியுள்ளது. இந்த நிலையும் மாற வேண்டும்.
விடயங்கள் ஆழ்ந்து பரந்து நோக்கப்பட்ட பின் கருத்துப்பகரப்படுதல் சிறப்பு.
நன்றி.
சந்திரவதனா எழுதவந்தது என்ன சில பேர் புரிந்து கொண்டது என்ன...ம்...தலைப்பு "குட்டைப் பாவாடைப் பெண்" வெறும் தச்செயலே தலைப்பு "நீளப் பாவாடைப் பெண்" என்றோ அல்லது வேறமாதிரியும் இருந்திருக்கலாம்.
எனக்கு எந்த வக்கிரத்தையும் இந்த பதிவு விதைத்ததாய் தெரியவில்லை.....hm!!
//ஆடையின்றிய பெண்ணின் முன் 80வீதமான பெண்களின் கண்களும் அகல விரிந்து கொண்டனவாம்.//
அனேகமான ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் பாத்து ஒப்பீடு செய்து கொள்வது அறிவியல் உண்மை (இந்த 80 வீதசாரம் சரியாக இருக்குமோ தெரியது) வக்கிரமாண பார்வையாகத்தான் இருக்கும் என்று சொல்ல முடியாது.!!!!!!
Post a Comment