Google+ Followers

Friday, June 29, 2007

கணிப்புகளும் சந்தேகங்களும்

எனக்கே சந்தேகம் இருந்தது, இந்த வசந்தனும், சயந்தனும் ஒரே நபர்கள்தானோ என்று.

சயந்தன்
வலைப்பதிவு என்ற ஒன்று எனக்கு அறிமுகமாக முன்னரே இணையவழி எனக்குப் பழக்கமானவர். அவரின் உயிர்ப்பு சஞ்சிகைக்கு நானும் ஆக்கங்கள் எழுதி மின்னஞ்சல் வழியாக நான் அவருடன் கதைத்திருக்கிறேன். பின்னர் எழுநா என்ற இணையத்தளத்தை ஆரம்பித்த போது ஊரிலிருந்து ஒரு தளம் என்ற உணர்வுப் பெருக்கில், மனம் சந்தோசத்தில் பொங்க வாழ்த்தும் அனுப்பினேன்.

தொடர்ந்த காலங்களிலும், அவ்வப்போது இணையத் தொடர்பாடல்களுக்கு உரிய ஏதோ ஒரு வழியாக நாம் பேசியிருக்கிறோம்.

வசந்தன்
வலைப்பதிவின் பின்னரே எனக்கு அறிமுகமானார். அதுவும் இணைய வழிதான். அவர் மெல்பேர்ணில்தான் இருக்கிறார் என்று நான் அறிந்து வைத்திருந்தேன். ஆனாலும் மெல்பேர்ணுக்கு இரு தடவை போயும் நான் அவரைச் சந்திக்கவில்லை. முதல் தரம் 2006 ஜனவரியில் நானும் அவரும் ஒரே பொங்கல் விழாவில் இருந்திருக்கிறோம். ஆனாலும் கண்டு கொள்ளவில்லை. அதே வருட இலக்கிய விழாவுக்கு நான் போயிருந்தேன். அவர் வரவில்லை. அந்த விழாவுக்கு வந்திருந்தால் கட்டாயம் ஒருவரையொருவர் இனம் கண்டு கதைத்திருப்போம்.

அந்த விழாவில் வலைப்பதியும் சந்திரலேகாவையும் இன்னும் பல அறியப்பட்ட எழுத்தாளர்களையும் சந்தித்து ஓரிரு வார்த்தைகளாவது பேசி மகிழ்ந்தேன்.

பின்னர் 2007 ஜனவரியில் பொங்கல் விழாவுக்கு வந்தாரோ இல்லையோ தெரியாது. நான் போயிருந்தேன். சிறிய மண்டபம். மேல் மாடியிலும் கீழ் மாடியிலுமாய் பார்வையாளர்கள். சந்திப்பதற்கான வாய்ப்புகள் வெகு குறைவாகவே இருந்தன.

குறிப்பிட்ட அந்த இலக்கிய விழாவுக்கு இம்முறை வசந்தன் போயிருந்தார். என்னால் போக முடியவில்லை.

இப்படியிருக்க நான்தான் சயந்தனும், வசந்தனும் என்ற சந்தேகம் யாருக்கோ வந்திருப்பதாக சின்னக்குட்டி எழுதியிருக்கிறார். அது சின்னக்குட்டிக்கே வந்த சந்தேகமாக இருந்தாலும் இப்போது தீர்ந்திருக்குமென நம்புகிறேன்.

இப்படியான சந்தேகங்கள் எனக்கும் நிறைய உண்டு. அவ்வப்போது சினேகிதியும், டிசேயும் ஒருவரோ என்ற சந்தேகம் வரும். அந்த அவுஸ்திரேலிய வலைப்பதிவாளர் சந்திப்பு பற்றிக் கூட எனக்கு சந்தேகம் வந்தது. ஆனாலும் மறந்து விட்டேன். (இப்போதுதான் அடப்பாவிகளா இப்படியுங் கூட எழுதுவார்களா என நினைத்துக் கொண்டேன்.) இப்படிப் பல.

ஆனாலும் ஆராய்ச்சிகள் எதுவும் இப்போது செய்வதில்லை. எனது வேலைகளை முடிப்பதற்கான நேரங்களையே துரத்திப் பிடிக்க வேண்டிய நிலையில் இருக்கும் போது அநாவசிய தேடல்களில் என்னால் ஈடுபட முடிவதில்லை.

யாராவது எழுதட்டுமே. என்னால் ரசிக்கக் கூடிய எனக்கு உற்சாகம் தரக் கூடிய எதையாவது வாசிக்கும் போது எனக்குள் ஏற்படும் நிறைவும், திருப்தியும் எனக்குப் பெரியது. அது எனக்கு அவசியமானதும் கூட. சில பதிவுகள் கவலையையும், எரிச்சலையும் தரத் தவறுவதில்லை. ஆனாலும் இரவு படுக்கைக்குப் போகுமுன் டிசே போன்றோரின் பதிவுகளில் எதையாவது ஒன்றைப் படித்து விட்டுப் படுக்கும் போது மனதில் ஒருவித நிறைவு தோன்றும். தமிழ்நதியின் பதிவுகளில் பெரும்பாலும் சோகம் இழையோடி இருந்தாலும் அதைப் படித்து முடித்த பின்னரும் இனம் புரியாத ஒரு துயர உணர்வு என்னை ஆக்கிரமித்திருந்தாலும் அவரது படைப்புகளை வாசித்த பின்னும் ஏதோ ஒரு நிறைவான திருப்தி ஏற்படுவதை மறுக்க முடியாது. (இப்படியான தன்மைகள் நான் குறிப்பிடாத இன்னும் பல பதிவுகளில் இருக்கின்றன. எல்லாவற்றையும் இங்கு நான் குறிப்பிடவில்லை.) எதையும் வாசிக்க முடியாது படுக்கைக்குப் போகும் பொழுதுகள் என்னுள் ஒருவித குறையையும், திருப்தியின்மையையும் எனக்குள் ஏற்படுத்தத் தவறுவதில்லை.

நேரம் கிடைக்கும் போது பிடித்த வலைப்பதிவுகளை வாசிப்பதும், முடிந்தால் அந்தப் பதிவு என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தைப் பொறுத்து, (அது நல்ல தாக்கமோ, வல்ல தாக்கமோ... எதுவானாலும்) எனது கருத்தை ஒரு வார்த்தையிலாவது எழுதி விடுவதுமே செய்ய முடிகிறது. அதிலும் பின்னர் கருத்தை எழுதுவோம் என நினைத்து வாசித்து விட்டு எதையும் எழுதாமலே விட்டவைதான் அதிகம்.

பொதுவாக நான் சினிமா விமர்சனங்களை வாசிப்பதில்லை. சினிமாச் செய்திகளையும் படிப்பதில்லை. ஆனால் புத்தக விமர்சனங்கள் யார் எழுதினாலும் முடிந்தவரை வாசிப்பேன். கடந்த வாரமோ அதற்கு முந்தைய வாரமோ டிசே ஒரு படவிமர்சனம் எழுதியிருந்தார். அதை டிசே எழுதினார் என்பதால் வாசித்தேன். பட விமர்சனம் என்றாலும், எழுதிய விதத்தின் சுவாரஸ்யம் ஏதோ ஒன்றை வாசித்தேன் என்ற திருப்தியை என்னுள் ஏற்படுத்தியது. அந்தச் சமயம் நியூசிலாந்திலிருந்து வந்திருந்த எனது மருமகனும் வீட்டில் நின்றான். அவன் நடிப்பு, நாடகம்… சினிமாத்துறை சம்பந்தமாகப் படித்துக் கொண்டிருக்கிறான். அதனால் அவனையும் அதை வாசிக்கச் சொன்னேன். அவன் கணினியின் முன் அமர்ந்திருந்து வீடு அதிரச் சிரித்துக் கொண்டிருந்தான். டிசேயின் ஒவ்வொரு வசனமும் அவனை அப்படிச் சிரிக்க வைத்தன. (அப்போதுதான் சொன்னான், தான் முதல்நாள் இரவு இருந்து சிவாஜி படத்தின் சில பகுதிகளை தரவிறக்கம் செய்து பார்த்தேன் என்று)

இதை ஏன் எழுத வந்தேன் என்றால் இந்தப் பதிவுக்குக் கண்டிப்பாகப் பின்னூட்டம் போட வேண்டும் என்று நினைத்தேன். இத்தனை சுவாரஸ்யமான பதிவாயிருந்தும் பின்னூட்டம் எழுத நினைத்தும் செயற்படுத்தப் படவில்லை.

எனது நேரங்களும், செயற்பாடுகளும் இப்படி இருக்கும் போது எனது பிள்ளைகளின் குரலில் நான் பதிவு செய்திருப்பேனோ என்ற ஐயம் நளாயினிக்கு. அதற்கு வில்லுப்பாட்டக்காரர் போல ஒரு ஆமோதிப்பு சின்னக்குட்டியிடம் இருந்து.

காலம் போகின்ற போக்கில் பிள்ளைகளோடே மின்னஞ்சலிலும், எஸ்.எம்.எஸ்சிலும், தொலைபேசியிலுந்தான் கதைக்க முடியும் போல் இருக்கிறது. என் அருகில் அவர்கள் வருகின்ற மதிய உணவு நேரத்தின் போதும் சரி, வார இறுதி நாட்களிலும் சரி அவர்களுக்கு இருக்கும் நேரத்தை மிஞ்சிய எனது மறதிகள் ஒரு புறமும், நேரத்தின் வேகம் இன்னோரு புறமுமாய் என்னை ஆக்கிரமிக்க தேவையானதையே கேட்கவோ, கதைக்கவோ முடியாத நிலைதான் மிஞ்சுகிறது.

இந்த நிலையில் இப்படி வேற்றுப் பெயரில் குரல்ப்பதிவு செய்ய அவர்கள் ஒப்புக் கொள்வார்களா? இப்படியான தேவைகளை விட அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளக் கூடிய இன்னும் பயனான எத்தனையோ விடயங்கள் உள்ளன.

ம்… என்னைப் பற்றி மற்றையவர்கள் எழுதிய ஓரிரு வார்ததைகளில் நான் மிகவும் ரசித்தவகைளில் இதுவும் ஒன்று. சின்னக்குட்டி எழுதியது.
சந்திரவதனா முந்தி தனது பதிவுகளை பிளைட்இலை லக்கேஜ்ஜாய்
போடுறது என்றால் முழு கார்கோ பிளேனையே கயர் பிடிக்கோணும் இப்ப சினிமா பாட்டு பதிவு தானே கை பையிலே கொணர்ந்து இடலாம் என்று தூயாவிடம் சொல்ல .தானும் தன்னுடைய சமையலை சாப்பாடுகளை கூட கார்கோ பிளேன் இலை கயர் பிடித்து கொணர்ந்ததாக தூயாவும் சொல்லி
கொண்டிருந்தா.

சந்திரவதனா
29.6.2007

16 comments :

பொன்ஸ்~~Poorna said...

ஏதோ விளையாட்டு பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருக்கிறோம் (இந்த வயசில் ;) சின்னக்குட்டி கூட இத்தனை கேலி பண்ணுகிறாரேன்னு நினைத்துக் கொண்டிருந்தேன்.. )

நீங்க என்னடாவென்றால், பெரிய பதிவே போட்டுவிட்டீர்கள்! :)

சின்னக்குட்டி said...

யாரோ அநோமதய பாண்டிய மன்னனுக்கு வந்த சந்தேகத்தை நான் எழுதியதால் இப்பொழுது திருவிளையாடல் தருமியின் நிலைக்கு நான் தள்ளப்பட்டுள்ளேன். எங்கே வாசிச்சன் என்று யோசிச்சு பார்த்ததிலை எனது பதிவுகளில் ஒன்றில் போட்டிருந்த அநோமதய பின்னூட்டமே.. அதை மறுத்து பதில் பின்னூட்டம் போட்டதாக ஞாபகம். அந்த பின்னூட்டத்தை தேடி கண்டு பிடித்து சமர்பிக்கிறேன். யாருக்கும் இது சம்பந்தமாக சங்கடங்கள் ஏதும் ஏற்பட்டிருந்தால் வருந்துகிறேன்.

நான் யாழ் இணயத்தில் இருந்தமையால் வசந்தன்,சயந்தன்,சந்திரவதனா நளாயினி அவர் அவர்களின் தனி த்துவமான எழுத்து ஆளுமைகளை எனக்கு நன்கு பரிச்சயம். இவர்கள் பற்றி சந்தேகம் எனக்கு எழ எப்ப நியாயமில்லை..

வசந்தன் தான் யாழ் இணையத்தில் இருக்கவில்லை என்று எங்கேயோ மறுத்ததாக ஞாபகம்.. என்றாலும் வசந்தனின் சயந்தனின் எழுத்துக்களின் வித்தியாசத்தை அறிவேன்

ஆனால் சந்திரவதனா இப்ப எனக்கு சந்தேகம் வந்துட்டுட்டு நீங்கள் சொன்னமாதிரி டிசேயும் சிநேகதியும் ஒருவரா என்று-:))))

Chandravathanaa said...

வரவுக்கும் பதிவுக்கும் நன்றி பொன்ஸ்.

சின்னக்குட்டி
ஒரு சங்கடமும் இல்லை. வருத்தமும் இல்லை.
நீங்கள் அதைத் தெரியப் படுத்தியதால்தான் இப்படி ஒரு சந்தேகம் யாரோ ஒருவருக்கேனும்
இருந்தது தெரிய வந்தது.

டிசே தமிழன் said...

/அவ்வப்போது சினேகிதியும், டிசேயும் ஒருவரோ என்ற சந்தேகம் வரும். /
சந்திரவதனா, இதென்ன கூத்து :-). சிநேகிதி குரற்பதிவெல்லாம் போட்டிருக்கின்றார். நீங்கள் இப்படிச் சொன்னதற்கே சிநேகிதியின் அருமை 'அண்ணாமார்கள்' வந்து உங்களுக்கும் (எனக்கும்தான்) சாத்தப்போகின்றார்கள். கவனம்.

Chandravathanaa said...

டிசே
சந்தேகம் வருவதில் தப்பில்லை என்றே நினைக்கிறேன்.
சந்தேகத்திற்கான ஏதோ கூறுகள் இருந்ததாலேயே சந்தேகம் வந்தது.
ஆனால் அதை உறுதிப் படுத்த முடியாத படி பல இருந்தன.
குரற்பதிவு பற்றி நான் சிந்திக்கவில்லை.

சினேகிதி said...

டிஜே இதை வாசிச்சாப்பிறகும் உயிரோட இருக்கறீரா :-))

எனக்குப்பயங்கர சந்தோசம் என்னைப்போய் டிஜேவா நினைச்சதுக்கு :-)

எல்லாருக்கும் நக்கல் கூடிப்போச்சு இனி எனக்கு அண்ணாமாரில்லை எல்லாம் தம்பிப்பட்டாளம்தான்.

kandhan said...

Vanakkam,

En Peyar Kandhan.

Tamilnadu - India.

Ennudaya Tamil Kavidhaigalai Inaya Thalathil Presurikka Enninen...


Eankku oru udhavi vendum .. Inge Tamil ezuthukkalileye Padaippugal iruppadai Kandu Santhoshikkren...

anbodu eppadi Tamil Ezhuthukkalil Kaniniyil Padaithu adhai Inayathil Presurippadhu endru Koorungalen...

akandhan@gmail.com

சுதர்சன்.கோபால் said...

உங்களைப் பற்றின எட்டு விஷயங்களை எழுதும் தொடர் பதிவுக்கு அழைச்சிருக்கேன்.மேலதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.

Chandravathanaa said...

அழைப்புக்கு நன்றி சுதர்சன்.
கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன்.
விரைவில் பதிகிறேன்.

Chandravathanaa said...

சினேகிதி
இப்படியும் சந்தோசப் படுங்கள்.

Chandravathanaa said...

காந்தன்
உங்களிடம் உள்ள ஏதாவதொரு தமிழ் எழுத்துருவில் எழுதுங்கள். அதை சுரதாவின் இந்த
http://www.suratha.com/reader.htm
உருமாற்றியில் யூனிக்கோட்டுக்கு மாற்றுங்கள். மாற்றியதை பிரதி எடுத்து எப்படி ஆங்கிலப் பதிவுகளை பிரசுரிக்கிறீர்களோ அதே போலப் பிரசுரியுங்கள். மிகச் சுலபமான வேலை.

விளக்கம் போதாதாயின் குறிப்பிடுங்கள் கூடுதலான விளக்கம் தருகிறேன்.

நளாயினி said...

ஐயொ ஐயோ ஐயோ. எனக்கு துளியளவும் சந்தேகமே இருக்கவில்லை. வசந்தன் சயந்தன் பற்றி. ஆனா பாவம் சந்திரவதனாக்காவை அவர்கள் என நினைத்தார்களே என பெரிய மனக் கஸ்டம் ஒன்று இருந்தது. சின்னக்குட்டியண்ணையினுடையதை வாசிக்கிற போது. அதனால் தான் அப்படி எழுதினேன். குரல் பதிவெல்லாம் வசந்தனும் சயந்தனும் செய்யினம் அவர்களின் குரலையும் என்னால் இப்போ இனம் காணமுடியும். அப்பிடி இருக்க அந்த குரல் பதிவை சந்திரவதனாக்கான்ரை பிள்ளைகள் செய்தார்கள் என சொன்னாலும் சொல்லுவியள் போலை கிடக்கு என ஒரு நக்கலுக்காக சின்னக்குட்டியண்ணைக்கு எழுதினேன் அவ்வளவு தான். ம்.. ஆனாலும் சந்திரவதனாக்காவின் சில மனப்பாரம் வெளியெறி உள்ளது எழுத்துவடிவில். அதையிட்டு எனக்கு சந்தோசம் தான் ஒரு அம்மாக்குரிய பாசம் பிள்ளைகள் அருகிருக்க முடியாத நிலை பிள்ளைகளோடு பேசமுடியாத நிலை இயந்திரத்தன வாழ்வு... சந்திரவதனாக்காவை எனது பின்னாட்டம் பாதிக்குமென நான் நினைத்தும் பார்க்க வில்லை. திரும்பவும் எனது பின்னாட்டத்தை பார்த்தால் புரியும் என நினைக்கிறேன். என்றும் அன்புடன் நளனாயினி

சின்னக் குட்டியண்ணாவாலை தான் எல்லாம். வாறன் அவரட்டையும் போய் கதைச்சிட்டு.

சயந்தன் said...

இங்கே ஏதாவது பிரச்சனையா..:)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இங்க என்ன தான் நடக்குது. புரியவே இல்லை.

நளாயினி said...

சயந்தன் said...
இங்கே ஏதாவது பிரச்சனையா..:)


எல்லாம் உங்களாலை தான்...:)..:)..:)

MATHARASI said...

//இங்க என்ன தான் நடக்குது. புரியவே இல்லை.//

யோகன் சார்.. இங்கை கள்ளன், பொளிஷ்.. விளாட்டு விளையாண்டாறாங்கள் வாறிங்களா.-))).

Followers

Blog Archive

Valaipookkal

 • ஆச்சிமகன் - Kattalin Inimai

 • ஆதித்தன் - காலப்பெருங்களம்

 • அருண் -ஹொங்கொங்ஈழவன்

 • இந்துமகேஷ்

 • இராம.கி - வளவு

 • ஈழநாதன் - Eelanatham

 • உடுவைத்தில்லை - நிர்வாணம்

 • கரன் - தமிழில் செய்திகள்

 • கலை - என்னை பாதித்தவை

 • காரூரன் - அறி(வு)முகம்

 • கானா பிரபா - Madaththuvasal

 • கானா பிரபா - Radio

 • குப்புசாமி - Kosapeettai

 • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

 • சஞ்யே - மலரும் நினைவுகள்

 • சத்யராஜ்குமார் - Thugalkal

 • வி. ஜெ. சந்திரன்

 • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

 • சயந்தன் - சாரல்

 • சிறீதரன்(Kanags) - Srinoolagam

 • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

 • சின்னப்பையன் - Naan katta sila

 • சினேகிதி

 • தமிழ் இ புத்தங்கள்

 • டிசே தமிழன் -D.J.Tamilan

 • தமிழன் -என்னுடைய உலகம்

 • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

 • தூயா - நினைவலைகளில்

 • நிர்வியா - Nirviyam

 • நிர்ஷன் - புதிய மலையகம்

 • நிலாமுற்றம் - Thivakaran

 • பாலா - Entrentrum anpudan

 • பாலா சுப்ரா - Tamil Scribblings

 • பாவை - SKETCH

 • பூவையர் - POOVAIYAR

 • பெண் பதிவர்கள்

 • மகளிர்சக்தி - Female Power

 • மதி கந்தசாமி

 • மதுரா - தமிழச்சிகள்

 • மயூரன் - M..M

 • மலைநாடான் -Kurinchimalar

 • முத்து - Muthu Valaippoo

 • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

 • மூனா - Thukiligai

 • ராகினி - கவியும் கானமும்

 • லீனாவின் உலகம்

 • வசந்தன் - vasanthanpakkam

 • வந்தியத்தேவன்

 • வலைச்சரம்

 • வெற்றியின் பக்கம்

 • றஞ்சி - ஊடறு

 • ஜெஸிலா - Kirukkalkal
 • http://ta.wikipedia.org
  Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

  WEBCounter by GOWEB

  AdBrite