
யாழ். நூலகம் எரியூட்டப்பட்ட 27 ஆவது ஆண்டு நாளான 31.05.08 அன்று உலகம் எங்கும் இந்த ஆவணப்படம் வெளியிடப்பட உள்ளது.
ஈழத் தமிழர்களின் பெரும் சொத்தாகவும், கல்விப்புலமையின் குறியீடாகவும் விளங்கிய யாழ். நூலகத்தின் வரலாறு, ஈழத்தமிழர்களின் அரசியல் மற்றும் வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்தது.

1933 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரையான காலத்தில் அந்த நூலகத்தின் வலிமிகுந்த வரலாறு இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளது.
இதனை சோமீதரன் உருவாக்கியுள்ளார்.
சிதைவுற்ற யாழ். நூலகத்தின் காட்சிகள், அங்கு பணியாற்றியோரின் வாக்குமூலங்கள், பத்திரிகை நறுக்குகள், உரைகள், கறுப்பு வெள்ளையிலான காணொளி நேர்காணல்கள், வரைபடங்கள், எடுத்துரைப்புக்கள் ஆகியவற்றுடன் "எரியும் நினைவுகள்" தொகுக்கப்பட்டுள்ளது.

தமிழ், ஆங்கிலம், பிரெஞ்ச் மற்றும் யேர்மன் மொழிகளில் எடுத்துரைக்கும் வகையில் இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டிருக்கின்றது.
"நிகரி" தயாரிப்புக் குழுவினர் 2006 ஆம் ஆண்டில் இருந்து இதனை உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர்.
எண்பதுகளில் வாழ்ந்த, உணர்ந்த ஒரு தலைமுறையின் எரியும் நினைவுகளை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச்செல்ல இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
Quelle - Puthinam
6 comments :
தகவலுக்கு நன்றி.
இந்த டிவிடி எங்கு வாங்கலாம்?
சிவா
mpsiva23@yahoo.com
பகிர்வுக்கு நன்றி வதனாக்கா...
இதனை உருவாக்கிய சோமிதரன் குழுவினருக்கு என் பாராட்டுக்களும் நன்றிகளும் கோடி கோடி... திரும்பவும் அப்படியானதொரு வரலாற்று சிறப்புடைய நூலகத்தை எங்களுடைய சந்ததிக்கு கொடுப்பதற்கு எல்லோரும் பங்களிக்க வேண்டும் என்பது என்னுடைய பணிவான வேண்டுகோள்...
where can we get this DVD ?
கட்டிடங்களைப் புதுபிக்கலாம். புதிதுப்புதிதாக புத்தகங்களையும் சேகரிக்கலாம். காலத்தால் கிடைக்கப்பெறாத அரும் பெரும் பொக்கிசங்கள் சாம்பலாகியதற்கு நிகராக ஒன்றுமே செய்யமுடியாது.
யாழ் நூலக எறிப்பு தமிழர்களின், ஈடுச்செய்ய முடியாத இழப்பு.
இருப்பினும் ஆவனாக்கம் பாராட்டுக்குறியது. சுட்டிகள் இருந்தால் அறியத் தாருங்கள்
நன்றி
யாழ். நூலக எரிப்புத் தொடர்பாக வெளிவந்திருக்கும் ஆவணப்படம் 'எரியும் நினைவுகள்'. 'நிகரி' வெளியீடாக வந்திருக்கும் இவ் ஆவணப்படத்தின் காட்சிப்படுத்தலும், வெளியீடும், இலண்டனில் நடைபெறவுள்ளது. சோமிதரனின் இயக்கத்தில் வெளிவந்தி 13.06.08 அன்று மாலை 18.30 மணிக்கு விம்பிள்டன் தொடரூந்து நிலையத்திற்கன்மையிலுள்ள, வொல்கா திரையரங்கில் , இந்நிகழ்வு நடைபெறவுள்ளது என, அதனை இலண்டனில் வெளியீடு செய்யும் 'ஒருபேப்பர்' அறிவித்திருக்ககிறது.
information - http://www.4tamilmedia.com/
www.burningmemories.org - ithuthan docu film kkaana web, engku vaangkalam enra viparam ingu kidaikkum.
nantry chandravathana.
Post a Comment