Monday, January 31, 2005

இட்லி செய்யும் இன்னுமொருமுறை


நா.கண்ணன் இட்லி செய்யும் முறையைத் தந்துள்ளார்.
எனக்குத் தெரிந்த இன்னுமொருமுறை.

உழுந்தை ஒரு இரவு முழுக்க ஊற விடுங்கள். (ஏறத்தாழ 7-8 மணித்தியாலங்கள். குளிர் பிரதேசங்களில் ஊறுவதற்கு ஊரை விடக் கூடிய நேரம் தேவைப் படுகிறது.) பின்னர் கழுவிச் சுத்தம் செய்து, பசுந்தாக அரைத்தெடுங்கள்.

1கப் உழுந்துக்கு 2கப் ரவை என்ற அளவில் எடுத்து, ரவையை ஆவியில் 20 நிமிடங்களுக்கு அவிய விடுங்கள்.

அவிந்த ரவை நகச்சூட்டுக்கு வந்ததும் அரைத்த உழுந்துடன் சேர்த்து சிறிதளவு உப்பும் போட்டு இட்லியாக ஊற்றக் கூடிய தன்மை வருமளவுக்குத் தண்ணீர் விட்டு நன்றாகக் கலந்து 10-12மணித்தியாலங்களுக்கு மூடி வையுங்கள்.

பின்னர் அவித்துப் பாருங்கள். கண்டிப்பாகப் பூப் போல வரும்.

Saturday, January 15, 2005

பதிப்புகளோடு...


அச்சில் பதித்து விட்டு புத்தகங்களை விற்கவும் முடியாமல், வீட்டில் வைக்கவும் இடமில்லாமல் கட்டியழுபவர்கள் ஒரு புறமிருக்க சந்தா கட்டியிருந்தும், புத்தகங்கங்களும், பத்திரிகைகளும் இடைநடுவில் வராது நின்று விடுவது இன்னொருபுறம் நடக்கிறது. இது விடயத்தில் இராதாகிருஷ்ணன் கொஞ்சம் மனம் நொந்திருக்கிறார்.

இந்த நிலையில் எந்த சந்தாவும் கட்டாமல் முழுக்க முழுக்க இலவசமாய் என் வீடு தேடி வரும் பத்திரிகைகளையும் அதை அனுப்பி வைக்கும் உரிமையாளர்களையும் நான் நன்றியோடு அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.

முதலாவதாக கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக லண்டனிலிருந்து என் வீடு தேடி வரும் வடலி பத்திரிகை. இப்பத்திரிகையில் நல்ல நல்ல பயனுள்ள கட்டுரைகள் இடம் பிடித்திருக்கும்.

அடுத்து, தற்போது சில மாதங்களாக மிகவும் சுவாரஸ்யமான முறையில் லண்டனிலிருந்து என் வீடு தேடி வரும் ஒருபேப்பர் பத்திரிகை. இப்பத்திரிகை வருகின்ற ஒவ்வொரு முறையும் எனது பிள்ளைகள் அதன் லேஅவுட்டையும் பெயரையும் வைத்து சிரிப்பலைகளோடு ஒரு விமர்சனம் செய்யாமல் விடுவதில்லை. உள்ளடக்கம் கூட சுவை சுவாரஸ்யம் கலந்து பயனுள்ள விடயங்களோடுதான்......

Thursday, January 13, 2005

தேடல்




அலை கொண்டு போனவர்களை
அல்பத்தில் தேடுகிறான் இவன்

Wednesday, January 12, 2005

தேடல்




உறைவிடத்தையும்
உடைமைகளையும் மட்டுமல்ல
கடல் கொண்டு போன
உறவுகளையும் தேடுகிறான் இவன்

Tuesday, January 04, 2005

TRO

Pls visit http://www.tsunami-trocsc.com/home/

இப்படியம் சிலர்

இன்று ஒரு தொலைபேசி அழைப்பு இந்தப் பத்திரிகையில் இருந்து வந்தது.
இந்தச் செய்தியை அவர்களது பத்திரிகையில் பார்த்து விட்டு ஒரு தமிழன் தொலைபேசியில் அழைத்து
"நீங்கள் எப்படி இந்தச் செய்தியை உங்கள் பத்திரிகையில் போடலாம்.
TROவும் Tigerம் ஒன்றுதானே. நீங்கள் கொடுக்கும் காசெல்லாம் Tigerக்குத்தானே போகுது...." என்று சண்டை போட்டாராம்.

இப்படி ஒரு தமிழனே சொன்ன பின் தாம் என்ன செய்யலாம் என்று கேட்டார்கள். ஒரு தமிழனே சொன்ன பின் தாம் அந்தச் செய்தியைப் போட்டதற்காக வருந்துகிறோம் என்றார்கள்.

எவ்வளவோ கதைத்தும் அவர்கள் திருப்தி அடையவில்லை.
ஒருவேளை நாளைய அவர்கள் பத்திரிகையில் TROவுக்கு உதவி செய்ய வேண்டாமென்ற செய்தி வரலாம்.

நாடு நலிந்து கிடக்கிறது. உதவி தேவைப்படுகிறது. அதை TRO செய்கிறது. அதைக் கெடுக்க எப்படி இவர்கள் துணிகிறார்கள். மனிதநேயத்தை மறந்து போனார்களோ? கோபதாபங்களைப் பார்க்கும் நேரமா இது? எல்லோரும் ஒன்று கூடி உதவ வேண்டாமா?

Saturday, January 01, 2005

இயற்கையின் சீற்றம் இத்தனை கொடியதா..?

எதை எழுதுவது? எப்படி எழுதுவது?
புதுவருடம் இத்தனை சோகத்தைச் சுமந்து வரப்போகிறதென யாராவது நினைத்தோமா..?
போரின் வடுக்கள் ஆறுமுன்னே எங்கள் சந்தோசங்களைக் கடல் கொண்டு போகுமென துளியாவது உணர்ந்தோமா?
அலை வந்து தழுவும்... தாலாட்டும்.. என்றுதான் எண்ணியிருந்தோம். இத்தனை கோரமாய் உயிர் பறித்துப் போகுமென்று எண்ணினோமா?
கண்மூடி முழிக்க முன் எம்முன்னே இத்தனை அழிவுகள் நடக்கும் என்று கனவிலாவது கண்டோமா?
போர்க்காலங்களில் போலக் கூட இம்முறை வருடத்தை வரவேற்க முடியவில்லை.
யாருக்கும் வாழ்த்துச் சொல்லவும் ஒப்பவில்லை. மனசு மலைத்துப் போய் நிற்கிறது.

உறவுகளைப் பறிகொடுத்த எங்கள் உறவுகளின் ஓலங்கள் மனதைப் பிசைகின்றன. கண்கள் பனிக்கின்றன.

இயற்கையின் சீற்றம் இத்தனை கொடியதா..?

கடலே எழுந்தே வீழ்ந்ததே...!

Wednesday, December 22, 2004

பர்தா

1986 இல் யேர்மனிக்கு வந்து சேர்ந்த போது எனக்கு லெபனானைச் சேர்ந்த இஸ்லாமிய நண்பி ஒருத்தி கிடைத்தாள். இருவருக்குமே பாஷை தெரியாது. அதாவது யேர்மனிய மொழி தெரியாது. அவளுக்கு ஆங்கிலத்தில் ஒரு சொல்லுக் கூடத் தெரியாது. இருவரும் சைகைகளாலேயே கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வோம்.

அவள் எனது வீட்டுக்கு அடிக்கடி வருவாள். நான் அவள் வீட்டுக்குப் பல நாட்களாகப் போகவில்லை. ஒரு நாள் அவள் மிகவும் வருந்தி அழைத்ததால் போனேன். அவள் வீட்டில் அவளோடு இருந்து கதைக்கத் தொடங்கும் போது அவள் தனது தலையைச் சுற்றிக் கட்டியிருந்த பர்தாவைக் கழற்றினாள். என்ன ஆச்சரியம்! இதுவரை என்கண்ணுக்குத் தெரியாத அழகு. நீண்ட சுருண்ட கேசத்துடன் அவள் மிகவும் கவர்ச்சியாகவும் அழகாகவும் இருந்தாள். அன்றுதான் முதன் முதலாக பர்தா அணியும் பெண்ணின் மீது எனக்கு அனுதாபம் ஏற்பட்டது. அதுவரை பாடசாலையில் இஸ்லாமியப் பெண்கள் முக்காடு போடுவதைப் பற்றிப் படித்த போதோ அல்லது எனது தாயகத்தில் முக்காடிட்ட முஸ்லிம் பெண்களைப் பார்த்த போதோ ஏற்படாத வருத்தம் அன்று எனக்குள் எழுந்தது. "ஏன் சூரியனையே காட்டாமல் அந்தத் தலைமயிரை ஒளித்து வைக்க வேண்டும்" என்ற ஆதங்கம் தோன்றியது.

அவளிடமும் அது பற்றிப் பேசினேன். எனது ஆதங்கத்தைச் சொன்னேன்.
"உனது தலைமயிரில் காற்றே படுவதில்லையா?" என்று கேட்டேன்.

அவள் எந்த வித உணர்வுகளையும் காட்டாது
"வெளியில் போகும் போதும், வீட்டுக்கு பிற ஆண்கள் வரும்போதும் கண்டிப்பாகப் பர்தா அணிய வேண்டும்" என்றாள்.

இது அவர்கள் முறை. இதில் தலையிட எனக்கு எந்தவித உரிமையும் இல்லை. ஆனாலும் மனசு விடாமல் என்னைத் தொந்தரவு பண்ணிக் கொண்டே இருந்தது. பிற ஆண்கள் பார்க்கக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக சூரியஒளி கூடப் படாமல் அந்தக் கூந்தலை மறைத்துக் கொண்டு திரிய வேண்டுமா? இது ஒரு அடக்கு முறை போலவே எனக்குப் பட்டது. ஆண்கள் பார்க்கக் கூடாது என்பதைத் தவிர வேறேதும் நன்மை அந்தப் பர்தாவில் இருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது. ஆனாலும் எனக்கு அவளின் அந்த நிலை வருத்தத்தையே தந்தது.

பின்னர் எனது மகளின் பாடசாலை நண்பி சல்மா. சல்மா துருக்கிய நாட்டைச் சேர்ந்தவள். அவளது ஒன்பதாவது வயதில்தான் அவளைச் சந்தித்தேன். எனது மகளோடு விளையாட வீட்டுக்கு வருவாள். பர்தா அணிந்திருப்பாள். எட்டு வயதிலேயே அணியத் தொடங்கி விட்டாளாம். ஒரு நாள் எனது மகளுக்கு தலை இழுத்து விடும் போது அவளுக்கும் இழுத்துப் பின்னினேன். பின்னும் போது இன்னதென்று சொல்ல முடியாத வேதனை என்னை ஆட்கொண்டது. மிக நீண்ட அழகிய கூந்தல். அதற்கு இனிச் சூரியஒளி கிடைப்பதே கடினம். ஆனாலும் நான் எதுவுமே சொல்லவில்லை. நான் சொல்வது அந்தப் பிஞ்சு உள்ளத்தில் ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்தில் மௌனித்து விட்டேன்.

இன்றும் கூட எனக்குள் கேள்வி இருக்கிறதுதான். பிற ஆண்கள் அவர்களின் அழகைக் கண்டு விடக் கூடாது என்பதைத் தவிர வேறு ஏதாவது நன்மை அதாவது மருத்துவ ரீதியான.. உடல் ரீதியான நன்மைகள் பர்தாவால் உண்டா...?

உஷா தோழியர் பகுதியில் பெண்கள் எங்கும் அடக்கப் படுகிறார்கள் என்பதை மனதில் கொண்டு முஸ்லீம் அல்லாதவர்கள் பார்வையில் இஸ்லாம்- ஏன் இந்த துரியோதனப் பார்வை? என்று எழுதப் போக அது ஒரு சிறிய சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. இப்படியான வாதங்கள் சில தெளிவுகள் ஏற்படுவதற்கு வழி வகுக்கும். ஆனாலும் நான் நேசகுமாரினதோ நாகூர்ரூமியினதோ இது சம்பந்தமான எழுத்துக்களை வாசிக்கவில்லை. அதனால் எந்தக் கருத்தையும் என்னால் இந்தச் சர்ச்சை சம்பந்தமாகச் சொல்ல முடியவில்லை.

அதே நேரம் யாரோ ஒருவரின் பின்னூட்டம் பொட்டு பற்றி எழுதியிருந்தது. இந்துக்கள் பொட்டு வைப்பது மருத்துவரீதியான நன்மைகளைக் கொண்டிருந்தது. இதே போன்று மருத்துவரீதியான நன்மை பர்தாவில் இல்லாத பட்சத்தில் பொட்டையும் பர்தாவையும் ஒப்பிட முடியாது.

இது விடயத்தில் எனது கருத்து என்று பார்த்தால் ஒரு இஸ்லாமியப் பெண்ணை பர்தா அணி என்றோ அல்லது அணியாதே என்றோ சொல்ல யாருக்கும் உரிமையில்லை. அது அவளாக முடிவெடுக்க வேண்டிய விடயம்.

எந்த ஒரு விடயம் சம்பந்தமாகவும் யாரும் யாருக்கேனும் விழிப்புணர்ச்சியை மட்டுமே கொடுக்கலாம். அதனாலான நன்மை தீமைகளை அலசி ஆராய்ந்து சொல்லலாம். ஆனால் "செய்" என்றோ "செய்யாதே" என்றோ சொல்வது அவர்களது சுதந்திரத்தில் கை போடுவதற்குச் சமனானது.

உஷாவின் இது சம்பந்தமான கருத்துக்களில் எனக்கு உடன்பாடும் உண்டு. முரண்பாடும் உண்டு. உதாரணமாக உஷா கூறிய பர்தா அணிவதைப் பற்றி முடிவெடுக்க வேண்டியது சம்மந்தப்பட்ட பெண்ணே தவிர மற்றவர்களுக்கு (அதிலும் பிற மதத்தினருக்கு) என்ன கவலை? இதோடு நானும் உடன் படுகிறேன். உஷா கூறிய எந்த இந்து பெண்ணையும் பார்த்தாலே இந்து என்று நெற்றியில் இருக்கும் குங்குமமும், தாலியும், வகிடில் இட்ட குங்குமமும், காலில் மிஞ்சியும் சொல்லும். அது மூட நம்பிக்கை என்று பீட்டரும், அமீதும் சொல்லலாமா? என்ற இந்தக் கருத்தில் முரண்படுகிறேன். மூலிகைகளில் செய்யப்பட்ட குங்குமத்திலும், பனைஓலையில் செய்யப் பட்ட மஞ்சள் பூசிய தாலத்திலும், கால்பெருவிரலுக்கு அடுத்த விரலில் அணியப் படும் மிஞ்சியிலும் மருத்துவ ரீதியான நன்மைகள் இருந்தன. இன்றைய மருத்துவ வளர்ச்சிகள் இல்லாத அந்தக் காலகட்டத்தில் இவைகள் அவசியப் பட்டன. அதனால் பொட்டையும் பூவையும் பொன்னையும் பர்தாவுடன் ஒப்பிட முடியாது. (இதே போல ஏதாவது நன்மைகள் பர்தாவில் இருந்தால் சம்பந்தப் பட்டவர்கள் தெரியப் படுத்துங்கள்.)

மற்றும் உஷா தான் தோழியரில் தொடர்ந்து எழுதலாமா என்றொரு கேள்வியையும் வைத்திருக்கிறார்.

ஏன் எழுதக் கூடாது? என்பது எனது கேள்வியாகிறது.

அங்கு எழுதக் கூடாத எதையும் உஷா எழுதவில்லை. தனது கருத்தை எழுதியிருக்கிறார். அதற்கான மற்றவர்களின் கருத்துக்கள் அவரவர் கருத்துக்கள். அதற்காக உஷா ஒதுங்க வேண்டிய அவசியமெதுவுமே இல்லை.
நான் உஷாவுக்குப் பதில் சொல்வதானால்
உஷா தொடர்ந்தும் எழுதுங்கள். உங்கள் கருத்துக்களைத் தயங்காமல் முன் வையுங்கள். உங்களுக்குத் தோழியரில் எழுதுவதுதான் வசதி என்றால் அங்கேயே தொடருங்கள்
.

Wednesday, December 15, 2004

இன்று முகுந்தின் திருமணம்


எனது நகரம் குளிரில் உறைந்து கிடக்கிறது. ஆனாலும் யேர்மனிய மக்கள் நத்தாரை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறார்கள்.

நானும் அவர்களில் ஒருத்தியாய் தெருவிலும், வேலையிடத்திலும் பின்னர் குழுந்தைகள் பேரக்குழந்தைகளுடன் வீட்டிலும்.. என்று விரைந்து கொண்டிருக்கிறேன். இந்த அவசரத்துள் கணினிப் பக்கம் எட்டிப் பார்த்தாலும் எதையும் உருப்படியாகப் பதிக்க முடியவில்லை.

நிறைய விடயங்கள் எழுத உள்ளன. நிறையப்பேரின் மின்னஞ்சல்கள் பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. பின்னூட்டம் என்பது ஒன்று கிடைத்தாலே பெரிய விடயம். அவைகளுக்குக் கூட பதில் எழுதவில்லை.

இன்று முகுந்தின் திருமணம். இந்த அவசரத்திலும் முகுந் சரஸ்வதி தம்பதியினரை வாழ்த்த முடிந்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.

http://mugunth.tamilblogs.com/files/Invitation_English.jpg

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite