பேரன் தீரன் விளையாடிக் கொண்டிருந்தான்.
எனது மருமகள் அவனிடம்
"தீரன் அந்த காற்சட்டையை ஒருக்கால் அப்பம்மாவுக்குப் போட்டுக் காட்டு"
விளையாடுவதை விட்டு வந்து காற்சட்டையைப் போட்டுக் காட்டுவதா..?
"பிறகு போட்டுக் காட்டுகிறேன்" என்றான்.
"இல்லை, இப்பவே போட்டுக் காட்டு. அப்பம்மா போகோணும்"
"அது பிரச்சனையில்லை. பிறகு Online னாலை எல்லாம் செய்யலாம்" என்றான்.
Friday, June 13, 2014
Sunday, June 08, 2014
வெளிப்படுத்தப்பட்ட இரகசியங்கள்
ஏறக்குறைய 150 வருடங்களுக்கு முதல்
இன ஒடுக்குமுறைக்காக அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பெற்ற கூ-குளுக்ஸ்-கிளான் என்ற அமைப்பு
சட்டரீதியாகத் தடைசெய்யப் பட்டதாயினும் திரை
மறைவில் அதன் செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்த அமைப்பு அமெரிக்காவில் மட்டுமல்ல
யேர்மனியிலும் தனது செயற்பாட்டை வைத்திருப்பது இப்பொழுது அம்பலத்துக்கு வந்திருக்கிறது.
வெளிநாட்டவர்களை வெறுக்கும் யேர்மனிய இனவாதிகள் சிலர் இந்த அமைப்பைப் புதுப்பித்து
யேர்மனியில் செயற்பட்ட செய்தியானது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த
அமைப்புக்குள் யேர்மனிய காவல்துறையைச் சேர்ந்தவர்களும் இருந்தது கண்டு பிடிக்கப் பட்ட
பொழுது அது அதிர்ச்சிக்குள் இன்னும் அதிர்ச்சியாகிப் போனது.
யேர்மனியில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான
பல தாக்குதல்கள் துலக்கப்படாமலே இருந்து வந்தது. அதிலும் 2000 இல் இருந்து 2006ம் ஆண்டுவரை
சிறிய வர்த்தக நிலையங்களை வைத்திருந்த எட்டு துருக்கி இனத்தவர்களதும், ஒரு கிரீக் நாட்டவரதும்
கொலைகள் மர்மமாகவும் வெளிநாட்டவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் இருந்து வந்தன.
25.04.2007 இல் கைல்புறோன் என்ற நகரத்தில் கடமையில் இருந்த பெண் பொலிஸ் ஒருவர் துப்பாக்கிச்
சூட்டில் கொல்லப் பட்டதும் அவருடன் கடமையில் இருந்த மற்றைய ஆண் பொலிஸ் படுகாயப் படுத்தப்
பட்டதும் யேர்மனியின் பொலிஸ் துறையையே புரட்டிப் போட்டது. எவ்வளவுதான் புலனாய்வுகள்
செய்தும் கொலையாளிகளை சட்டத்தின் முன்னால் நிறுத்த முடியவில்லை. இது யேர்மனிய பொலிஸின்
கையாகாலாத தன்மையா? அல்லது குற்றவாளிகளின் தடயங்கள் திட்டமிட்டே அழிக்கப் படுகின்றனவா? என்ற கேள்விகளும்,
கருத்தாடல்களும் மக்கள் மத்தியில் மேலோங்கத் தொடங்கின. பொலிஸைச் சேர்ந்த ஒருவர் பட்டப்
பகலில் அதுவும் கடமையில் ஈடுபட்டிருக்கும் பொழுது அவரது வாகனத்தில் வைத்துச் சுட்டுக்
கொல்லப் பட்டதும், மற்றையவர் படுகாயப் படுத்தப் பட்டதும், தாக்குதலின் பின்னர் அவர்களது ஆயுதங்கள் களவாடப் பட்டதும் சாதாரண விடயங்கள்
அல்ல. பொலிசுக்கே நிலமை மோசம் என்றால், சாதாரண பொதுமக்களுக்கு, அதுவும் வெளிநாட்டவருக்கு
என்ன பாதுகாப்பு என்று யேர்மனிய ஊடகங்கள் கேள்வி எழுப்பின.
Haller Tagblatt என்ற பத்திரிகையின் ஆசிரியரும், எடிட்டரும், எழுத்தாளருமான துமிலன்
என்பவர், யேர்மனியில் இயங்கும் கூ-குளுக்ஸ்-கிளான் பற்றி தான் சேகரித்த தகவல்களை பத்திரிகையில்
எழுதத் தொடங்க மறைந்திருந்த பல தகவல்கள் மக்களைச் சென்றடைந்தன. அதிலும் முக்கியமாக,
நியோநாசி என்று அழைக்கப் படும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான அமைப்புக்கும் கூ-குளுக்ஸ்-கிளான் அமைப்புக்குமான தொடர்புகளை அவர்
வெளிச்சம் போட்டுக் காட்ட, அது பொலிஸ் துறைக்கு ஒரு சவாலாகப் போய் விட்டது. அரசியல்வாதிகளும்
தங்கள் பங்குக்கு பாராளுமன்றத்தில், சட்டம், பாதுகாப்பு, ஒழுங்கு பற்றி விவாதத்தைத்
தொடங்கி விட்டனர்.
04.11.2011 இல் Mundlos,
Boehnhardt ஆகிய இரு யேர்மனியர் தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் தற்கொலை செய்யும்
முன் Eisenach என்ற நகரத்தில் உள்ள வங்கியில் 70,000 யூரோக்களைக் கொள்ளை அடித்திருந்தார்கள்.
பொலிஸார் Eisenach நகரத்தைச் சுற்றி வளைத்து கொள்ளையர்களைத் தேடத் தொடங்கினார்கள். அநாதையாக நின்ற வெள்ளை நிற கரவன் வாகனம் ஒன்றை பொலிஸ் நெருங்கும் பொழுது, அதற்குள் துப்பாக்கிச்
சூட்டுச் சத்தம் கேட்டது. தொடர்ந்து கரும் புகையுடன் வாகனம் தீப்பற்றிக் கொண்டது. தீயை
அணைத்து பொலிஸ் வாகனத்துக்குள் நுளைந்த பொழுது
வாகனத்துக்குள் Mundlos, Boehnhardt இருவரும்
தங்களைத் தாங்களே சுட்டுக் கொண்டு இறந்திருந்தார்கள். இறப்பதற்கு முன்னால் வாகனத்தை
உள்ளிருந்தே அவர்கள் தீயிட்டு இருந்தது புலனாய்வில் தெரிய வந்தது. வாகனத்துக்குள் இருந்து
110,000 யூரோக்கள், கொலைக்குப் பயன் படுத்திய ஆயுதங்கள், கைல்புறோன் நகர பொலிஸிடம்
இருந்து கைப்பற்றப் பட்ட துப்பாக்கிகள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றினர். இதேநாள் மாலை
3மணிக்கு Weissenborn என்ற நகரத்தில் ஒரு வீடு குண்டு வைத்துத் தகர்க்கப் பட்டது. இந்த
வீட்டில்தான் தற்கொலை செய்து கொண்ட Mundlos, Boehnhardt இருவரும்
வாழ்ந்து வந்தார்கள் என்பது பொலிசுக்குத் தெரிய வந்தது. இவர்களுடன் வாழ்ந்து
வந்த இன்னும் ஒருவரான Beate Zschaepe என்ற
பெண்ணே குண்டு வைத்து வீட்டைத் தகர்த்து விட்டுத் தப்பி ஒடியதும் தெரிய வந்தது.
பின்னர் அவரை பொலிஸ் கைது செய்தது. இதன் பின்னர் பல தகவல்கள்
வெளிவரத் தொடங்கின. வெளிநாட்டவர்களின் கொலைகளைச் செய்தவர்கள் இவர்கள்தான் என்றும்,
14 தடவைகள் வங்கிகளைக் கொள்ளையடித்து அந்தப் பணத்தில்தான் தங்கள் செலவுகளைப் பார்த்துக்
கொண்டார்கள் என்றும் தற்கொலை செய்த ஆண்களுடன் செயற்பட்ட ஒரு பெண்ணை கைது செய்திருக்கிறோம்
என்றும் பொலிஸ் அறிக்கையை வெளியிட்டது.
„சரி. அப்படியாயின் கைல்புறோன் நகரத்தில்
பெண் பொலிஸை ஏன் கொன்றார்கள்? பொலிஸ் துறைக்குள்ளும் நியோநாசியா?' என்ற கேள்விகளை ஊடகங்கள்
கேட்கத் தொடங்கின. இவை சம்பந்தமாகப் பல கட்டுரைகளை அவை எழுதத் தொடங்கின.
பல கேள்விகளுக்குப் பதில்கள்; இன்னும்
தெளிவாக இல்லை. நியோநாசி என்ற இனவாத அமைப்பு தேசிய சோசலிய திரைமறைவு அமைப்பாக (Nationalsozialistischer
Untergrund (NSU)) தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு செய்த குற்றச் செயல்கள் மற்றும்
அவர்களுக்கு உதவுபவர்கள் போன்ற பல விடயங்களைத் திரட்டி யேர்மனியில் பத்து எழுத்தாளர்கள்
இணைந்து எழுதிய ´என்எஸ்யு வின் இரகசிய விடயங்கள்` (Geheimsache NSU) என்ற புத்தகம் மே 26 இல் வெளிவந்துள்ளது.
இந்தப் பத்து எழுத்தாளர்களில் ஒருவராகத்
துமிலன் இருக்கின்றார். தமிழரான இவர் 1986இல் யேர்மனிக்கு இடம் பெயர்ந்தவர். இன்று
யேர்மன் பத்திரிகை ஒன்றின் ஆசிரியராகவும், எடிட்டராகவும், எழுத்தாளராகவும் இருக்கின்றார்.
இவரது எழுத்துக்கள் பெரும்பாலும் பல சிக்கலான பிரச்சனைகளையும் ஆபத்து நிறைந்த விடயங்களையுமே
தொட்டு நிற்கின்றன.
துமிலன், தேசிய சோசலிய அமைப்பின் திரைமறைவுச்
சம்பவங்களைப் பத்திரிகையில் வெளிச்சம் போட்டுக் காண்பித்தவர்களில் முதன்மையாக இருக்கிறார்.
அவர்கள் சம்பந்தமான விடயங்களைச் சேகரிப்பதற்காக பல ஆபத்து நிறைந்த இடங்களுக்குச் சென்று
தகவல்களைத் திரட்டி இருக்கிறார்.
இன்றும் என்எஸ்யூ வின் செயற்பாடுகள்
தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. சமீபத்தில், என்எஸ்யூ விற்கு எதிராக நீதிமன்றத்துக்கு
சாட்சி சொல்ல வர இருந்த ஒருவர் வழக்குக்கு முதல் நாள் மர்மமான முறையில் இறந்திருந்தார்.
இந்த சம்பவம் இன்னமும் நாங்கள் இருக்கிறோம் என்று அவர்கள் கட்டியம் கூறுவதாக இருக்கிறது.
துமிலன் ஒரு தமிழனாக இருந்து யேர்மனிய
மொழியில் நூல் வெளியிடுவதில் பெருமை இருக்கிறது. அதை விட வெளிநாட்டவர்களையே கொலை செய்யும்
ஒரு நியோநாசி அமைப்பைப் பற்றியும் அவர்களின் திரைமறைவுச் செயற்பாடுகளையும் எழுதும்
ஒரு வெளிநாட்டவர் என்றளவில் மிகப் பெருமையாக இருக்கிறது.
ஆழ்வாப்பிள்ளை
26.5.2014
Labels:
2014
,
Book
,
Buch
,
Geheimsache NSU
,
Germany
,
Haller Tagblatt
,
Ku-Klux-Klan
,
Schwäbisch Hall
,
Selvakumaran
,
Thumilan
,
ஆழ்வாப்பிள்ளை
Tuesday, June 03, 2014
நானும் என் தலைமுடியும்
முடி உதிருது என்று ஜேர்மனிக்கு வந்த தொடக்கத்தில் (1986-1987) ஒரு மருத்துவரிடம் போனேன். அவர் பெண் மருத்துவர். . கதவு வாசலில் நின்ற படியே என்னை அவர் பார்த்த பார்வை..... இப்பவும் மறக்க மாட்டேன். அப்படியே தூரத்திலேயே நின்றபடி - 'தலை இழுக்கும்போது உதிரும் முடியையும் அதே போல் முழுகிப்போட்டு தலை இழுக்கும்போது உதிரும் முடியையம் எண்ணிக்கொண்டு வா பார்ப்போம்' என்றார்.
இவ்வளவு
தலைமுடியை வைத்துக் கொண்டு வேலைமெனக்கெட்டு அங்கு வந்திருக்கிறேன் என்பது போன்ற பாவனை
அவரிடம். அவருக்கென்ன தெரியும்..! செவ்விளனியும். கொப்பறா தேங்காயும் போட்டுக் காய்ச்சி
அதைத் தினமும் தவறாமல் என் தலையில் தேய்த்துத் தேய்த்து அம்மா வளர்த்து விட்ட முடியில்
அரைவாசிக்கு மேல் கொட்டி விட்டிருப்பது. எனது நீண்ட கூந்தல் நாளுக்கு நாள் குறுகிக் கொண்டே
போய்க் கொண்டிருப்பது. இரட்டைப்பின்னலுக்குள்ளேயே அடங்க மறுத்த முடி இப்போது பஞ்சத்தில்
வாடியவன் போல் ஒற்றைப் பின்னாலாகி நலிந்து நிற்பது.
இந்த டொக்டர்
சரியில்லையென்று சொல்லி இன்னொருவரிடம் போனேன். அவர் என்னைப் பார்த்ததும் அதிர்ந்து
போனார். இவ்வளவு முடி வைத்திருக்கிறாய்... என்று வாயைப் பிளந்தார். பிறகு சாட்டுக்கு
என் தலைமுடியைத் தொட்டுப் பார்த்து விட்டு 'கொட்டும் முடியை எண்ணிக் கொண்டு வா' என்றார்.
அன்றிலிருந்து
இன்று வரை தலைமுடி கொட்டிக் கொண்டுதான் இருக்கிறது. எடுத்துக் குப்பைக் கூடையில் போட்டு
விட்டு அடுத்த வேலையைப் பார்க்கிறேன். அதன்பின் எந்தத் தோல் வைத்தியரையும் நான் நாடியதில்லை.
சந்திரவதனா
3.6.2014
Labels:
2014
,
சந்திரவதனா
,
நிகழ்வு
,
நினைவுகள்
Tuesday, March 18, 2014
யாருக்கும் பெருமைப்படத் தோன்றவில்லையா?
எங்களை நாங்களே தூற்றிக் கொள்வதில் எமக்கு நிகர் நாமே என்ற
நிலையில்தான் தமிழர் நாம் இன்னும் இருக்கிறோம். ஒரு ஜேர்மனியப் பெண் தமிழை
அதுவும் எமது பேச்சுத்தமிழைக் கதைக்கும் போது ஆச்சரியமாகவும்,
மகிழ்வாகவும்தான் இருக்கிறது. அதற்காக எம்மை நாமே தாழ்த்திக் கொள்ள
வேண்டுமா?
12வயதில் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்த எங்கள் குழந்தைகள் அந்தந்த நாட்டு மொழிகளுடன் எந்தளவு தூரம் போராடியிருப்பார்கள் என்பது எனக்கு நன்கு தெரியும். ஆங்கிலம் பேசும் நாடுகளுக்கு புலம்பெயர்ந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ஓரளவேனும் அடிப்படை ஆங்கிலம் தெரிந்திருந்தது. ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, டென்மார்க்... போன்ற நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த பெற்றோருக்கு அந்நாட்டு மொழியில் இருந்து ஒரு சொல்லுக் கூடத் தெரியாமலே இருந்தது. வீட்டில் அவர்கள் தனித்தமிழே கதைத்தார்கள். அவர்கள் குழந்தைகள் எல்லோருமே வெளியில் அந்நாட்டு மொழியைப் பேசவேண்டிய நிர்ப்பந்தத்தில் மிகவும் கஸ்டப்பட்டார்கள். பேசுவது மட்டுமல்ல மொழியையும் படித்து அதனூடு கல்வியையும் கற்க வேண்டிய ஒரு கடினமான சூழல் அவர்களுக்கு இருந்தது.
ஆனாலும் சாதித்தார்கள். வீட்டில் தனித்தமிழ். மிஞ்சினால் ஆங்கிலக் கலப்புடனான சில சொற்கள். வெளியில் டொச், டெனிஸ், இத்தாலி, பிரெஞ்... இந்த நிலையிலும் அந்தந்த நாட்டுப் பிள்ளைகளை விட நல்ல மார்க்குகள் அந்தந்த நாட்டு மொழிகளுக்கே எங்கள் பிள்ளைகள் பெற்று இன்று நல்ல பதவிகளில் கூட இருக்கிறார்கள். அனேகமான புலம்பெயர்ந்த தமிழ்பிள்ளைகள் எல்லோருமே பட்டப்படிப்பை முடித்திருக்கிறார்கள். இதையிட்டு நாம் பெருமைப்பட வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட வயதின் பின் புலம்பெயர்ந்த எங்கள் பிள்ளைகளால் நாம் வாழும் நாட்டின் மொழியை மிகச்சரளமாகப் பேசமுடியும், கூடவே ஆங்கிலமும் நன்கு தெரியும். அதை விட இன்னும் ஏதாவது ஒரு மொழி - உதாரணமாக ஜேர்மனியில் வாழ்பவருக்கு பிரெஞ் அல்லது ஸ்பானிஷ் தெரியும். இவ்வளவோடு தமிழைச் சரளமாகப் பேசவும் தெரியும்.
அதே நேரம் இங்கு மிகக்குழந்தைகளாக வந்த பிள்ளைகளுக்கோ அன்றி இங்கு பிறந்ந பிள்ளைகளுக்கோ வேறு பிரச்சனைகள் உள்ளன. வீட்டில் தமிழ். வெளியில் அந்த நாட்டுமொழி. அவர்களுக்குத் தமிழ் தெரியாது என்றில்லை. எப்படித்தான் வீட்டில் தமிழ் கதைத்தாலும் வெளியில் முழுக்க முழுக்க வேற்றுமொழி. கல்வி வேற்றுமொழியில்.
தமிழா அந்நாட்டு மொழியா சிறந்தது என்பதில் அவர்களுக்குத் தடுமாற்றம். அவர்கள் தமது நண்பர்களுடன் தமிழில் பேசமுடியாது. அவர்களது உச்சரிப்பில் தமிழ் கலந்திருந்தால் பாடசாலையில் அவர்களுக்குச் சில பின்னடைவுகள் வரும். நாள் முழுக்க அந்நாட்டு மொழியுடன் ஊடாடி விட்டு வீட்டுக்கு வந்ததும் தமிழுக்கு அவர்கள் மாறுகிறார்கள். சில பிள்ளைகளால் அது முடிவதில்லை. எப்படித்தான் தமிழ் முக்கியம் என்று பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்தாலும் அந்நாட்டு மொழி அக்குழந்தைகளுக்கு எல்லாவற்றையும் விட முக்கியமானதாக இருக்கிறது. அவர்கள் கதைக்க, விளையாட, படிக்க, வேலை செய்ய.. என்று, அம்மொழி இல்லாமல் அவர்களுக்கு அவர்களது எதிர்காலம் இல்லை.
ஆனால் அவர்களும் அந்த ஜேர்மனியப் பெண் சொல்வது போல தேவை வரும் போது கதைப்பார்கள். அவர்களுக்குத் தமிழே விளங்காது என்றில்லை. எங்காவது விதிவிலக்காக யாராவது இருக்கலாம். அதற்காக ஒட்டு மொத்தத் தமிழரையுமே கேலி செய்ய வேண்டியதில்லை.
நான் எப்போதுமே எங்கள் பிள்ளைகளை நினைத்துப் பெருமைப்படுகிறேன். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட எமது பிள்ளைகள் தமிழையும் பேசிக்கொண்டு வேற்றுநாட்டு மொழியொன்றில் படித்து, நல்ல முறையில் சித்தியடைந்து, நல்ல நல்ல பதவிகளில் அந்நாட்டவகளையும் விட மேலானநிலைகளில் கூட இருக்கிறார்கள்.
அந்த ஜேர்மனியப் பெண்ணை நான் பாராட்டுகிறேன். எமது நாட்டு மொழியைப் பேசுகிறார் என்பதால் மகிழ்கிறேன். அதையும் விட எங்கள் பிள்ளைகளை நினைத்து மிகமிகப் பெருமைப் படுகிறேன்.
ஏன் நாங்களே எத்தனை வயதுகளின் பின் புலம் பெயர்ந்தோம். தமிழோடு அடி நுனி கூடத் தெரியாத ஒரு மொழியைப் பேசுகிறோம். எழுதுகிறோம். அந்நாட்டு மக்களோடு வாழ்கிறோம். யாருக்கும் பெருமைப் படத் தோன்றவில்லையா?
சந்திரவதனா
18.3.2014
White Lady Speaks Jaffna Tamil - யாழ்ப்பாணத் தமிழ் பேசு

பத்தி
,
புலம்
,
மொழி
Monday, March 17, 2014
அஞ்சல்தலைகளும் நானும்
நினைவுகளோடான பயணங்கள் தவிர்க்க முடியாதவை. நாம் விரும்பியோ
விரும்பாமலோ அவை எம்மைத் துரத்திக் கொண்டும், பற்றிக் கொண்டும் எம்மோடு பயணித்துக்
கொண்டே இருக்கின்றன. எந்தெந்த நேரத்தில் எவை எம்மைத் தொற்றிக் கொள்ளும் என்றோ அவை எப்படியெல்லாம்
எம்மை ஆட்டிப்படைக்கும் என்றோ, அல்லது அடித்துப் போடுமென்றோ எமக்குத் தெரிவதில்லை.
சிறுதுரும்பு போதும் ஏதோ ஒரு நினைவு எம்மை ஆட்கொள்ளவும்,
அது சங்கிலித் தொடராய் எம்மை எங்கெல்லாமோ அழைத்துச் செல்லவும்.
அஞ்சல்தலைகள், அவைகள் கூட என் வாழ்வில் மறக்கமுடியாமல் சிலரை
ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. எனது 12வது வயதில் நான் அஞ்சல்தலைகளைச் சேகரிக்கத்
தொடங்கினேன். அந்த நேரத்தில் அதுவே எனது தியானமாக இருந்தது என்று சொல்லுமளவுக்கு மிகவும்
ஈடுபாட்டுடன் அச்சேகரிப்பில் நான் ஒன்றியிருந்தேன்.
ஆரம்பகாலத்தில் அஞ்சல் சேகரிப்புக்கான அல்பங்கள் எனக்குக்
கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் அதாவது இற்றைக்கு 42வருடங்களின் முன்னர் 1972இல் அப்படியான
அல்பங்கள் கடைகளில் இருந்தனவா என்பது கூட எனக்குத் தெரியவில்லை. எனது சேகரிப்புக்காக
அம்மாவிடம் கேட்டு கறுப்புதாள்களிலாலான ஒரு கொப்பி(வரைதல்கொப்பி) வாங்கி அதிலேதான்
எனது முத்திரைகளை ஒதியம்பிசின் போட்டு ஒட்டினேன்.
இலங்கை அஞ்சல்தலைகள் மிகவும் அழகானவை. கூடவே மாலைதீவு, நிப்பன்..
போன்ற இடங்களிலிருந்து வருகின்ற அஞ்சல்தலைகளும் மிகஅழகானவை. இந்த அஞ்சல்தலைகளுக்காகவே
தபால்காரனின் மணிச்சத்தம் கேட்டதும் விரைந்து முன்கேற்றுக்கு ஓடுவேன். வரும் கடிதத்தில்
ஒட்டப்பட்டிருக்கும் முத்திரையே குழந்தைத்தனம் இன்னும் ஒட்டியிருந்த எனது பால்யபருவத்து
நினைவுகளில் முட்டியிருக்கும். ஆனால் எனது பால்யபருவம் மட்டுமே தெரிகின்ற பெரியோர்க்கு
எனது ஓட்டம் அசாதாரணமானதாய்தான் தெரியும். அதனால் குதிக்காதே.. குமர்ப்பிள்ளை நீ..
என்று குறிப்பாக எனது பாட்டாவிடம்(அம்மாவின் தந்தை) அடிக்கடி பேச்சு வாங்கிக் கொள்வேன்.
இப்போதைய 10 - 12 வயதுப் பெண்பிள்ளைகளைப் பார்க்கும் போதெல்லாம்,
ஓடுவதற்கும், வாய் விட்டுச் சிரிப்பதற்குமே யோசிக்க வேண்டிய எனது அந்தவயதுப் பருவம்
நினைவில் வராமல் போவதில்லை. நல்லவேளையாக எனது அம்மாவும், அப்பாவும் எனக்கு அவ்வளவான
கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை. ஆனாலும் சுற்றியிருந்த எல்லாப் பெரியவர்களுமே நெருப்பை
மடியில் கட்டிக்கொண்டிருப்பவர்களைப் போல் என் அசைவுகள் ஒவ்வொன்றையும் அவதானித்துக்
கொண்டேயிருந்தார்கள்.
பாட்டா எம்மில் மிகவும் அன்பானவர். அதனால் அவரது அன்பான கண்டிப்புகளை
உதாசீனப்படுத்த என்னால் முடிவதில்லை. கலங்கி வழிகின்ற கண்ணீரோடு என் சின்னச்சின்னக்
கனவுகளில் சிலதையும் தொலைத்து விட்டு அவர் விருப்பம் போலவே நடந்து கொள்வேன். அவர் முன்னிலையில்
ஓடுவது, வாய்விட்டுச் சத்தமாகச் சிரிப்பது, துள்ளுவது.. போன்றவைகளைத் தவிர்த்துக் கொள்வேன்.
மாலையில் பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்தால் அம்மா தரும்
ஆட்டுப்பால் தேநீரைக் குடித்து விட்டு, தம்பியையும் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு
பாட்டா வீட்டுக்குப் போய் விடுவது எனது வழக்கம். கூடவே அப்பா அனுப்பும் தினபதி, சிந்தாமணி..
போன்ற பத்திரிகைகளையும் எடுத்துக் கொண்டு போவேன்.
பாட்டாவும், பெத்தம்மாவும் எப்போதும் எனக்காக ஏதாவது வைத்திருப்பார்கள்.
அவர்கள் வீட்டு முன்றலில் உயர்ந்து, நெடுத்து நின்றிருந்த ஒற்றைப்பனையின் சலசலப்போடு
நுங்கோ, பூரானோ இல்லையென்றால் மள்ளாக்கொட்டை சுவீற்றோ ஏதோ ஒன்று எனக்காகக் காத்திருக்கும்..
பாட்டாவும் சரி, பெத்தம்மாவும் சரி இருவருமே மேனை, மேனை என்றுதான் அன்பாகக் கதைப்பார்கள்.
ஆனால் ஒழுக்கம் என்பது பாட்டாவுக்கு மிகவும் முக்கியம். அதனால் அவரது அன்போடு கண்டிப்பும்
கண்டிப்பாகக் கலந்தே இருக்கும்.
அவர்களது வீட்டின் முன்விறாந்தையில் நான் தம்பியுடன்
இருந்த பொழுதுகள் அவர்களுக்கும் இனிமையான பொழுதுகளாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
அப்பொழுதுகளில் பாட்டாவிடம் அன்புதான் மேலோங்கியிருக்கும். மிகவும் இதமாகக் கதைப்பார்.
அப்படியான ஒரு பொழுதில்தான் எனது முத்திரை சேகரிப்பு பற்றி அவரிடம் சொல்லி கோர்ட்டில்
உறுதி எழுதும் பொழுதுகளில் முத்திரைகள் கிடைத்தால் எனக்குத் தரும்படி கேட்டேன். உடனேயே
அவர் மலர்ந்த முகத்துடன் என்னைத் தனது அறைக்குள் அழைத்து, அவரது மேசை லாச்சிக்குள்
இருந்து ஒரு கட்டுக்கடிதங்களை எடுத்துப் போட்டார். முழுவதும் ஜேர்மனியில் இருந்து வந்த
கடிதங்கள். அவற்றைப் பொக்கிஷம் போலத்தான் வைத்திருந்தார் போல் ஞாபகம். அக்கடித உறைகள்
ஒவ்வொன்றிலுமே ஒன்றோ, இரண்டோ ஜேர்மனிய முத்திரைகள் ஒட்டப்பட்டிருந்தன. எல்லா உறைகளையுமே
எனக்குத் தந்து விட்டார்.
அப்போது எனது சிந்தனைகள் முத்திரைகளின் மேலேயே இருந்ததால்,
அக்கடிதங்கள் என்னவாக இருக்குமென நான் ஆராயவில்லை. அந்த முத்திரைகளை ஆவியில் பிடித்தும், தண்ணீரில்
போட்டும் உறையில் இருந்து கழற்றி எடுத்துக் காயவைத்து, புத்தகங்களுக்குள் வைத்து நேராக்கி
எனது அல்பத்தில்(கொப்பியில்) ஒட்டினேன். பிறிதொரு சந்தர்ப்பத்தில் அந்த முத்திரைகளையெல்லாம்
அக்கொப்பியில் இருந்து கவனமாகக் கழற்றி எடுத்து இப்போது சரியாக ஒரு அல்பத்தில் போட்டு
வைத்திருக்கிறேன்.
அந்த அஞ்சல்தலைகள் வெறும் அஞ்சல்தலைகள் மட்டுமல்ல. எனது பாட்டாவையும்,
பாட்டா, பெத்தம்மாவுடனான அந்தச் சிறிய வீட்டின் ஞாபகங்களையும் அவர்களது அன்பையும் சுமந்து
நிற்பவை.
சந்திரவதனா
17.3.2014
Labels:
2014
,
அஞ்சல்தலைகள்
,
சந்திரவதனா
,
நினைவுகள்
Wednesday, December 11, 2013
இன்றைய என் நினைவுகளில்...
அனேகமான பொழுதுகளில் காலையில் கண் விழிக்கும் போதே, அன்றைய நாளில் செய்ய வேண்டியவைகளின் பட்டியலும் நினைவுக்குள் வந்து விடும். அந்தப் பட்டியலின் நீள அகலங்களையும், கனத்தையும் பொறுத்தே இன்னும் சற்று அப்படியே படுத்திருக்கலாமா அல்லது எழுந்து விட வேண்டுமா என்று மூளை தீர்மானிக்கும். சில சமயங்களில் எந்த அவசரமும் இன்றி மனசு வலு றிலாக்சாக இருக்கும். திடீரென்றுதான் அன்று செய்ய வேண்டிய ஏதாவது ஒரு முக்கிய வேலை நினைவில் வந்து அவசரப்படுத்தும்.
ஆனால் எந்த நிலையிலும், எந்த அவசரத்திலும் ஏதாவது ஒரு பாடலின் சில வரிகள் மனதுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கும். அப்பாடலைக் கண்டிப்பாகக் கேட்டே ஆக வேண்டும் போல மனசு அந்தரிக்கும். அவ்வரிகள் பாடலின் தொடக்க வரிகளாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. இடைவரிகளாகக் கூட இருக்கலாம்.
முன்னர் என்றால் அப்பாடல்களை எல்லாம் நம்மால் கேட்க முடிவதில்லை. வீட்டில் இருக்கும் ஒலி, ஒளி நாடாக்களில் அவை இருந்தால்தான் மனதின் அந்த அவா நிவர்த்தியாகும். இப்போது என்றால் அப்படியில்லை. நினைத்தவுடன் நினைத்ததைக் கேட்கலாம்.
அப்படி என் நினைவுகளில் வந்து அவ்வப்போது என்னை அருட்டும் வரிகளைக் கொண்ட
பாடல்களில் ஒன்று
எண்ணப் பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா
உன் இமைகளிலே உறக்கம் வர கண்கள் மறுக்கின்றதா
தென்றல் பாடும் தாலாட்டில் நீ இன்பம் பெறவில்லையா
இரவு தீர்ந்திடும் வரையில் விழித்திருந்தாலே துன்பம் தரவில்லையா...
இன்னொன்று
காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே...
இன்னுமொன்று
புல்லாங்குழலே பூங்குழலே
நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே
உனக்கும் எனக்கும் சரி பாதி
கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால்
நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்...
இப்படி எத்தனையோ பாடல்கள். ஏன் எதற்கு என்றே தெரியாமல் எனக்குள்ளே மாறி மாறி இசைத்துக் கொண்டே இருக்கின்றன.
நேற்றைய என் நினைவுகளில் வந்த பாடல் வரிகள்
இதழோடு இதழ் சேரும் காரணமென்ன
அது இனிப்பென்று கவிதைகள் சொல்லுவதென்ன
சொல்லில் தோன்றுமோ மன்மதக் கலை அள்ளிப்பார்க்க வேண்டும்
உன் முல்லைப்பூவிதழ் மெல்ல என்னிடம் முத்தம் சிந்த வேண்டும்
இன்றைய என் நினைவுகளில்
அலையாய் மோதிக் கொண்டே இருக்கும் பாடல்
அத்தனை பழமும் சொத்தைகள்தானே
ஆண்டவன் படைப்பினிலே
அத்திப்பழத்தைக் குற்றம் கூற
யாருக்கும் வெட்கமில்லை
மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து
முதுகைப் பாருங்கள்
முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு
அதனைக் கழுவுங்கள்
மேலும் கீழும் கோடுகள் போடு
அதுதான் ஓவியம்
நீ சொன்னால் காவியம்
சுட்டும் விரலால் எதிரியைக் காட்டி
குற்றம் கூறுகையில்
மற்றும் மூன்று விரல்கள்
உங்கள் மார்பினைக் காட்டுதடா
எங்கேயாவது மனிதன் ஒருவன்
இருந்தால் சொல்லுங்கள்
இருக்கும் அவனும் புனிதன் என்றால்
என்னிடம் காட்டுங்கள்...

2013
,
சந்திரவதனா
,
நினைவுகள்
,
பாடல்கள்
Wednesday, October 23, 2013
Sunday, September 29, 2013
உங்களுக்கான ஒரு தேர் விக்கிப்பீடியா
எழுதியவர்: நீச்சல்காரன்
திருக்குறள் பற்றிய குறிப்பு வரைக என்று பள்ளிகளில் கேட்கும் போது கை தானாக விக்கிப்பீடியாவைத் தேடிச் செல்லும். இயற்பியலில் கடினமான ஒரு தேற்றத்தை எளிமையாகக் கற்றுக்கொள்ள வேண்டியபோது மூளை விக்கிப்பீடியா பக்கத்திற்கே செல்லும். விலையேறிக் கொண்டிருக்கும் வெங்காயத்தின் வரலாற்றைப் பார்க்க வேண்டும் என்றாலும் விக்கிப்பீடியாவே துணை. காவியத் தலைவர்கள் முதல் கட்சித் தலைவர்கள் வரை மற்றும் அமெரிக்க வால்ஸ்ட்ரீட் முதல் கோயம்புத்தூர் வால்பாறை வரை எல்லா விசயங்களையும் உள்ளடக்கிய கலைக் களஞ்சியமே விக்கிப்பீடியா ஆகும். இந்த அற்புத வசதியைத் தமிழுக்கும் விக்கிமீடியா நிறுவனம் இலவசமாக வழங்கிவருகிறது. அதில் தகவற்களஞ்சியமாக விக்கிப்பீடியாவும், சொற்களஞ்சியமாக விக்சனரியும், நூல் களஞ்சியமாக விக்கிநூல்களும் மேலும் பல களஞ்சியங்களும் இருந்து வருகிறன. எந்தவொரு கட்டுப்பாடின்றி யாரும் இதன் தகவல்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதாலேயே இதனைக் கட்டற்ற கலைக்களஞ்சியம் என்று கூறிக்கொள்கிறோம். உலகமெல்லாம் கணினித் திரைகளுக்குத் தமிழ்க் காட்சி தந்த தமிழ் விக்கிப்பீடியா, தற்போது தனது பத்தாண்டுகால நிறைவை அடைந்துள்ளது. இதுவரை 55800 கட்டுரைகளைக் கடந்து, சுமார் 4600 தமிழ்ப் பங்களிப்பாளர்களையும் தாண்டி பயணித்துக் கொண்டிருக்கிறது.
இது எப்படிச் சாத்தியமானகிறது? கப்பலோட்டிய தமிழனின் வரலாற்று ஆவணத்தை மா. போ. சிவஞானம் அவர்கள் தொகுத்து வ.உ.சிதரம்பரனார் பற்றிய அறிய தகவல்களை அடுத்தத் தலைமுறையினருக்குச் சேர்த்தார். பன்மொழி ஆய்வு செய்து தமிழின் வேர்ச்சொற்களையும் கலைச் சொற்களையும் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் தொகுத்தளித்து இன்று பெருகிவரும் தொழிற்நுட்பச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைத் அன்றே தந்துதவினார். சிதறிக்கிடந்த தமிழ் நூல்களை எல்லாம் அன்று தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாதையர் தொகுத்து அச்சில் ஏற்றி உலகச் செம்மொழிகளுக்கு நிகராகச் சங்க இலக்கியங்களை வைத்து வரலாறு எழுதச் செய்தார். இப்படிக் காலம்தோறும் தொகுத்துத் தொகுத்து பாதுகாக்கப்பட்டு வந்ததே நமது மொழிச் சொத்து. அந்தப் பரம்பரையின் கணினியுக வாரிசுகளான நம்மைப் போன்றவர்களால் தொகுக்கப்பட்டுச் செதுக்கப்படும் தேரே விக்கிப்பீடியா.
விக்கி தொழிற்நுட்பமும், இணையம் என்கிற வசதியும் இருந்தால் உலகில் உள்ள எல்லா அறிவுச் செல்வத்தையும் தமிழில் அனைவருக்கும் கிடைக்கச் செய்யலாம். மேலும் காலத்தால் அழியாத முறையில் பாதுகாக்கவும் முடியும். ஆனால் எப்படி செய்வது? ஒன்றாம் வகுப்பில் சுழியம் வாங்கிய நாங்களும், கல்லூரியில் பட்டம் வாங்கிய நீங்களும், படிப்பு முடித்த பக்கத்து வீட்டுக்காரரும், எட்டிப் பார்க்கும் எதிர் வீட்டுக்காரரும் என யாரும் செய்யலாம். விக்கிப்பிடியாவொரு கலைக்களஞ்சியம். எந்தவொரு பயனுள்ள விசயத்தைப் பற்றியும் இதில் கட்டுரை எழுதலாம். அல்லது ஏற்கனவே உள்ள ஒரு கட்டுரையைத் திருத்தியும் மேம்படுத்தலாம். அதெல்லாம் விருப்பமில்லை என்றால் படமெடுக்கும் கருவிகளைக் கொண்டு முக்கிய இடங்கள், பொருட்கள் என படம் எடுத்தும் படக் களஞ்சியத்திற்கு உதவலாம். பதினொரு வயது முதல் எழுபத்தியேழு வயது கொண்டோரும் இதில் பங்களித்து வருகிறார்கள் என்கிற செய்தியே இதற்கான எந்த வயதுத் தடையுமில்லை என்று உரைக்கும். தனித்தனியாக இணையத்தில் தகவல் பதிந்து ஏற்றுவதைவிட ஒரே இடத்தில் எல்லாவிதத் தகவலையும் தொகுக்கும் பயனே தனிதான்.
கல்வி ஒரு வணிக சாதனமாக மாறிவரும் வேளையிலும், பெருமுதலாளிகளின் கைக்குள் மட்டும் அறிவுச் செல்வங்கள் முடங்கும் வேளையிலும் அடிப்படை உரிமையாகக் கல்வியை அனைவருக்கும் விலையில்லாமல் வழங்கும் ஒரு தேவையை விக்கிமீடியா பூர்த்திச் செய்கிறது. அதில் ஒன்று கட்டற்ற (கட்டுப்பாடுகள் இல்லாமல் இலவசமாகப் பயன்படுத்தும்) கலைக்களஞ்சியமாக விக்கிப்பீடியா என்ற சேவை. கல்விக்காக விலையுயர்ந்த புத்தகங்களைச் சார்ந்திருந்த காலத்தை இணையம் உடைத்தது உண்மைதான் ஆனால் கலைச்செல்வங்கள் எல்லாம் திறன்படுத்தப்பட்ட ஒழுங்கில் இணையத்தில் கிடைப்பதில்லை. அதனைச் சமன் செய்ய உதவும் சமவெளிப் பகுதியே விக்கிப்பீடியாவும் அதன் இதர திட்டங்களும் ஆகும். எப்படி உப்புச் சத்தியா கிரகத்தின் போது மக்கள் உணவு, நீர் உறைவிடம், போராட்டம் எனத் தங்களால் இயன்றதைக் கொடுத்து உதவினார்களோ அதுபோல விக்கிப்பீடியாவிலும் உங்களால் இயன்ற அறிவுச் செல்வங்களைக் கொடுத்து சமுதாயத்தின் ஞானவொளிக்கு மெருகூட்டுங்கள். கல்விக்கு விலைவைக்கும் சமுகத்திற்கு எதிராகக் கட்டற்ற களஞ்சியங்களை விளையுங்கள்.
விக்கிப்பீடியா ஒரு மக்களாட்சித் தத்துவத்தில் பயணிக்கக் கூடியது, அதாவது மக்களால் மக்களுக்கு வழங்கப்படுவது. அதனால் தனி மனிதனோ தனிக் குழுவோ அதனைச் சொந்தம் கொண்டாடுவதில்லை. அனைவரும் வகுத்த கொள்கையின் படி நீங்களும் ஆசிரியர், நீங்களும் வாசகர். அனைவருக்கும் புரியவேண்டும் என்கிற அடிப்படையில் உங்களால் சொல்லப்பட்ட சில எளிய விதிமுறைகள் உண்டு அதனைப் பின்பற்றிக் கட்டுரைகளோ, சொற்பொருளோ, நூலோ உருவாக்கி தமிழ் வளர்க்கலாம். எழுத்தாற்றலும், அறிவாற்றலும் இதில் பங்களிப்பதன் மூலம் வளப்படுத்தலாம்.
விக்கிப்பீடியாவின் தமிழ்ப் பதிப்பான தமிழ் விக்கிப்பீடியா 2013 செப்டம்பருடன் தனது பத்தாண்டு பயணத்தை அடைகிறது. அதனைக் கொண்டாடும் பொருட்டும், மேலும் இச்சேவை பலரைச் சென்றடையவும் செப்டம்பர் 29ம் நாள் சென்னை, கிண்டி பொறியியற் கல்லூரியில் கூடல் ஒன்றை நிகழ்த்தவுள்ளது. தமிழ் விக்கிப்பீடியர்கள் உட்படப் பிற மொழி விக்கிப்பீடியர்கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கூடவுள்ளனர். நீங்களும் கலந்து கொண்டு கொண்டாடுங்கள், விக்கிப்பீடியாவுடன் இணைந்து இச்சமூகம் பயன்பட வடம் பிடியுங்கள். உங்ககளுக்காக ஒரு தேர் காத்திருக்கிறது.
கூடல் பற்றி மேலும் அறிய:https://ta.wikipedia.org/s/36sk

Thursday, June 20, 2013
கேட்டலும் பார்த்தலும்
"பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்!" என்றிருந்ததைப் பார்த்திருக்கக் கூடாதுதான். பார்த்தததன் விளைவு பல இரவுகள் தூக்கமின்றித் தவித்தேன். பகல்களிலும் அக் காட்சியை என் மனக்கண்ணில் இருந்து அகற்ற முடியாது பெரிதும் அவஸ்தைப் பட்டேன்.
அப்படியான பல செய்திகளைக் கேட்டிருக்கிறேன். வாசித்திருக்கிறேன். ஆனால் பார்க்கக் கூடாத ஒன்றைப் பார்ப்பது உளரீதியாக எத்துணை பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இப்போதுதான் முழுமையாக உணர்கிறேன்.
இன்னும் கூட அடிக்கடி எனது கட்டுப்பாட்டையும் மீறி அக்காட்சி எனக்குள் தோன்றித் தோன்றி என்னைப் பாடாய் படுத்துகிறது. சமையலறையில் கத்தியைத் தொடும் ஒவ்வொரு பொழுதிலும் மனதுக்குள் ஒரு நடுக்கம் ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை.

Wednesday, June 19, 2013
சுட்டுவிரல்
ஞாயிற்றுக்கிழமை
சமையலறையில் புதிய கத்தியொன்றை சுத்தம் செய்வதாக என் சுட்டுவிரலைத்தான்
கீறிக் கொண்டேன். சட்டென கழுத்து வெட்டிக் கொல்லப்பட்ட பெண்களின் நினைவில்
மனம் வலித்தது.
சற்று ஆழமான கீறு என்பதால் மருத்துவரிடம் செல்ல வேண்டியதாயிற்று. பலன் தலையைக் கூட சரியாக வாரிக்கட்ட முடியாதபடி தீப்பந்தம் போல விரலில் ஒரு பெரிய பந்தம். குளிப்பதே பெரும் பாடாயிருந்தது. சில சமயங்களில் சமநிலை கூடத் தட்டுப்படும் போல இருந்தது. கைகளை இழந்தவர்களும், கால்களை இழந்தவர்களும் என்னை அசௌகரியப் படுத்திக்கொண்டே இருந்தார்கள்.

Subscribe to:
Posts
(
Atom
)
Followers
Blog Archive
-
►
2024
(
11
)
- ► March 2024 ( 1 )
- ► January 2024 ( 1 )
-
►
2017
(
21
)
- ► August 2017 ( 1 )
-
►
2016
(
23
)
- ► November 2016 ( 5 )
-
►
2015
(
28
)
- ► March 2015 ( 6 )
-
►
2013
(
10
)
- ► December 2013 ( 1 )
- ► October 2013 ( 1 )
- ► September 2013 ( 1 )
-
►
2012
(
7
)
- ► November 2012 ( 1 )
- ► August 2012 ( 1 )
-
►
2011
(
7
)
- ► December 2011 ( 1 )
- ► November 2011 ( 1 )
- ► August 2011 ( 1 )
- ► April 2011 ( 1 )
- ► March 2011 ( 1 )
-
►
2010
(
10
)
- ► November 2010 ( 1 )
- ► March 2010 ( 1 )
-
►
2009
(
27
)
- ► October 2009 ( 1 )
- ► September 2009 ( 5 )
-
►
2008
(
38
)
- ► January 2008 ( 1 )
-
►
2007
(
46
)
- ► December 2007 ( 1 )
- ► September 2007 ( 8 )
- ► August 2007 ( 1 )
-
►
2006
(
137
)
- ► October 2006 ( 15 )
- ► September 2006 ( 25 )
- ► August 2006 ( 21 )
- ► April 2006 ( 12 )
- ► March 2006 ( 9 )
- ► February 2006 ( 7 )
-
►
2005
(
172
)
- ► December 2005 ( 12 )
- ► November 2005 ( 25 )
- ► September 2005 ( 9 )
- ► August 2005 ( 7 )
- ► April 2005 ( 13 )
- ► March 2005 ( 15 )
- ► February 2005 ( 37 )
-
►
2004
(
172
)
- ► December 2004 ( 7 )
- ► November 2004 ( 10 )
- ► October 2004 ( 11 )
- ► September 2004 ( 13 )
- ► August 2004 ( 24 )
- ► April 2004 ( 23 )
- ► March 2004 ( 11 )
- ► February 2004 ( 7 )
-
►
2003
(
36
)
- ► November 2003 ( 11 )
- ► October 2003 ( 7 )
- ► September 2003 ( 8 )
- ► August 2003 ( 6 )

_2.png)