Friday, July 17, 2015

சாதல் என்பது...

பெண்களின் மனஉணர்வுகளை ஆண்களும், ஆண்களின் மனஉணர்வுகளைப் பெண்களும் எழுதித்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். ஒரு கணவன் தனது உண்மையான மனஉணர்வுகள் எல்லாவற்றையும் தனது மனைவியிடம் சொல்லி விடுவதில்லை. மனைவியும்தான். சொன்னால் பிரச்சனையாகி விடும் என்பதுதான் அதற்கான முக்கிய காரணம்.

 வாசித்தலில் கூட மனம் ஒட்டாத ஒரு பொறுமையின்மையான நேரத்தில் இன்று தற்செயலாக பொ. கருணாகரமூர்த்தியின் சாதல் என்பது... என் கண்களில் பட்டது. கருணாகரமூர்த்தியினது என்பதால் அலையும் மனதை இழுத்து நிறுத்தி வாசித்தேன்.

இம்மாத காலச்சுவடில் பிரசுரமாகியுள்ளது.

 கற்பனைகளை விட உண்மைக்கே முக்கியத்துவம் கொடுப்பவை பொ. கருணாகரமூர்த்தியின் படைப்புகள். இந்தப் படைப்பு மனதில் மெல்லிய சோகத்தை ஏற்படுத்தக் கூடியதாகவே இருந்தது. ஒருவித மனக்கவலையுடன் எழுதப்பட்டது போன்றும் தோன்றியது. கூடவே ஒரு ஆணின் உணர்வுகளும், சபலங்களும் தயங்காது எழுதப்பட்டிருந்தது.

எழுத்தின் போக்கு ஏனோ மனதை நெருடுகிறது. கருணாகரமூர்த்தி, நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?

17.7.2015


சாதல் என்பது...
பொ. கருணாகரமூர்த்தி
 http://kalachuvadu.com/issue-187/page64.asp

Thursday, July 09, 2015

வக்கிரங்கள்

எனக்குத் தெரிய ஒரு பெண் குழந்தை தனது உறவுக்காரர் ஒருவர் தன்னுடன் பிழையாக நடக்கிறார், அத்து மீறுகிறார் என்பதை சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தவித்து ஒருவாறு வெளியில் சொன்ன போது - சுற்றியுள்ள மற்றைய உறவுகள் - குறிப்பாகப் பெண்களே அவள் இப்படியொரு ஊத்தைத்தனமான பொய்யைச் சொல்கிறாள் என்று சொல்லி அவள் மீதே பழியைப் போட்டு அவளைப் பொய்காரி ஆக்கி விட்டார்கள்.

Wednesday, July 01, 2015

பெருவிரல்

என்ன நடக்கிறது என்று சிந்திக்க முன்னமே அது நடந்து விட்டிருந்தது. அடித்துச் சாத்திய கதவின் ஓசையா, வலி பற்றிய மூளைக்கான அறிவிப்பா முந்திக் கொண்டதெனத் தெரியவில்லை. திரும்பிய போதுதான் தெரிந்தது பொறியில் மாட்டிய எலியாய் நான் நிற்பது.

எப்படி நடந்தது? எல்லாமே சரியாகத்தானே போய்க் கொண்டிருந்தன. வழமையைப் போல மீண்டும் ஒரு கணத்தில் கவனத்தை எங்கோ சிதற விட்டு விட்டேனே!

அழக் கூட முடியவில்லை. வலி என்னை இனியில்லை என்றளவுக்கு வருத்தியது. என்னிலிருந்து 200மீற்றர் தூரத்தில் அந்த உணவகத்தை மொய்த்திருந்தவர்கள் சிரிப்பும், களிப்புமாய் உணவைச் சுவைத்துக் கொண்டும், ஐஸ்கிறீமை ரசித்துக் கொண்டும், அற்ககோல் நிரம்பிய பானங்களை ருசித்துக் கொண்டும் எத்துணை ஆனந்தமாக இருந்தார்கள். வழமையில் அதனருகில்தானே எனது வாகனத்தை பார்க் பண்ணுவேன். இன்று பார்த்து ஏன் இங்கே?

என்னைப் பார்ப்பார் யாருமில்லை. பார்த்தவர்களும் நான் என்ன செய்கிறேன் என்று பார்ப்பது அநாகரிகம் என்பது போல பார்த்தும் பார்க்காமல் இருந்தார்கள். உதவி, உதவி என்று நான் கத்தும் போதெல்லாம் காற்று அதை மறுபக்கமாக தன்னோடு அள்ளிச் சென்று கொண்டிருந்தது. கொஞ்சநஞ்சமாக மிஞ்சிய என் ஒலியும் அவர்களின் சிரிப்புக்குள் கரைந்து கொண்டிருந்தது.

யாராவது என்னைத் தாண்ட மாட்டார்களா என்று ஏக்கத்துடன் மனம் தவித்த போது என்னை நோக்கி ஒரு மோட்டார் வாகனம். அதில் ஒரு இளம்சோடி. அந்த வலியிலும் மனம் நம்பிக்கையில் மகிழ்ந்தது.

கஸ்ரப்பட்டு எனது இடது கையை கையை உயர்த்தி அவர்களை சைகையால் அழைத்து எனது வலது கையைச் சுட்டிக் காட்டினேன். வாய் உதவி உதவி என்று ஒலி எழுப்பியது. அவர்கள் என்னைப் பார்த்துச் சிரித்தவாறு எனக்குக் கையைக் காட்டி மகிழ்ச்சி தெரிவித்தவாறு என்னைக் கடந்தார்கள்.

இப்போது சட்டென்று அறுந்து விழுந்த நம்பிக்கையில் வலியோடு பயமும் தொற்றிக் கொண்டது. ஒவ்வொரு கணமும் யுகமாய் என்னை வதைத்துக் கொண்டிருந்தன.

எப்படி அது நடந்தது என்று தெரியவில்லை. டிக்கியைத் திறந்து சில பொருட்களை வைத்துச் டிக்கிக்கதவை அடித்துச் சாத்தியவாறே காரின் இடதுபக்கம் விரைந்த போதுதான் அது நடந்தது. கைவிரலை நெரித்து விட்டேன் என்று மட்டும் முதலில் உணர முடிந்தது. ஆனால் விரல் எடுக்க முடியாதபடி சிக்கி விட்டது என்பது பின்புதான் தெரிந்தது. லொக் விழுந்து விட்டதால் சும்மா கதைவைத் திறக்க முடியவில்லை. வலதுகைப் பெருவிரல் மாட்டியிருப்பதால் இடதுகையை வலது பக்கத்துக்கு நீட்டி சுவிச்சை அழுத்தவும் முடியவில்லை. எனது ஒவ்வொரு சிறு அசைவும் என் உயிரையே வதம் செய்தன. யாராவது வந்து திறந்து விடாமல் நான் அசையவே முடியாது.

எனக்கு முன்னே வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும் கார்களை நோக்கி யாரும் வருவதாக இல்லை. அவர்களில் அனேகமானோர் தமது மாலைப் பொழுதை நண்பர்களுடனும், உறவினர்களுடனும் உணவகங்களிலும், மதுபானச் சாலைகளிலும், கோப்பிக்கடைகளிலும் இனிதே கழித்துக் கொண்டிருந்தார்கள்.

மீண்டும் ஒரு இளம்சோடி. தேவாலயப்பக்கத்திலிருந்து படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தார்கள். என்னிலிருந்து குறைந்தது 100மீற்றர் தூரமாவது இருக்கும். அவர்கள் என் பக்கம் திரும்பாமலே உணவகப் பக்கமாகப் போய் விடலாம். நான் அவசரமாக இடது கையை உயர்த்தி அசைத்தேன். அவர்கள் என்னைக் கண்டு விட்டார்கள். ஆனால் மகிழ்வோடு கையை அசைத்து விட்டு திரும்பி உணவகம் நோக்கி நடக்க எத்தனித்தார்கள்.

நான் மிகுந்த பிரயத்தனப்பட்டு எனது குரலை உயர்த்தி எனக்கு உங்கள் உதவி தேவை என்றேன். அதிர்ஸ்டம் அந்தளவேனும் இருந்திருக்க வேண்டும். என் வேண்டுதல் அவர்களது செவிகளைச் சென்றடைந்து விட்டது. ஆச்சரியமும், கேள்வியும் முகங்களில் தொக்கி நிற்க என்னை நோக்கி வந்தார்கள்.

என் நிலைமையை சைகோயோடு விளக்கினேன். புரிந்ததும் அந்த ஆண் அவசரமாக கதவை அழுத்தித் திறந்து விட்டான். வலது கையின் பெருவிரல் சப்பளிந்து போய் இருந்தது. தாளமுடியாத வலியில் கைகளை உதறினேன். பெருவிரல் வெடித்திருந்ததில் குருதி சிதறியது.

அந்தப் பெண் ஏதாவது வகையில் எனக்கு உதவ எத்தனித்தாள். „இந்தியர்களா நீங்கள்?“ எனக் கேட்டேன். „ஓம்“ என்றார்கள். பெயரையோ, வேறு விபரங்களையோ கேட்கும் நிலையில் அப்போது நான் இருக்கவில்லை.

பிறகென்ன மருத்துவமனை, அவசரப்பிரிவு, காத்திருப்பு... என்று நேற்றைய பொழுது (29.06.2015) நடுஇரவு 12 மணிவரை அங்கேயே போய்விட்டது.

எக்ஸ்ரே எடுத்துப் பார்த்து பெருவிரல் எலும்பு அந்த இடத்தில் நசிந்தும், சிதைந்தும் போயிருக்கிறது என்றார் மருத்துவர். இப்போது எல்லாம் ஸ்தம்பிதம். பத்துப் போட்ட வலது கையுடன் நான்.

சந்திரவதனா
30.6.2015

Friday, April 24, 2015

நானும் அவர்களும்

நான்
யாருடன் பேசலாம்
யாருடன் பேசக் கூடாது
என்பதையெல்லாம்
அவர்களேதான் தீர்மானிக்கிறார்கள்!

தாம்
யார் யாருடனெல்லாம்
உறவு வைத்திருக்கிறார்கள் என்ற விடயத்தில்
நான் தலையிடவே கூடாது என்ற
நிபந்தனையைச் சற்றும் தளர்த்தாமல்!
சந்திரவதனா
2015

Friday, April 17, 2015

பூவரசம் இலைகளுக்கு நாங்கள் அந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்தோமா ?

என்ன ஒற்றுமை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. மாதொருபாகன் நாவலில் பூவரசு முக்கியப்படுத்தப் பட்டிருந்தது. அந்நாவலை வாசிக்கும் பொழுது எனக்குள் எழுந்த கேள்விகளில் பூவரசு பற்றிய கேள்வியும் பெரிதாக இருந்தது.

பூவரசம் இலைகளுக்கு நாங்கள் அந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்தோமா என்று யோசித்த போது பரியாரிமார் மருந்தைக் கொடுத்து சுத்தமான பூவரசம் இலையில் தேனுடன் குழைத்து சாப்பிடும் படி சொல்லுவது ஞாபகத்தில் வந்தது. அடுத்தடுத்து ஞாபகத்தில் வந்தவை இலைகளைச் சுற்றி பீப்பீ ஊதினோம். குழைகளை ஆட்டுக்கு உணவாக்கினோம்.

பூவரசம் கதியால்களும், மரங்களும் இல்லாத வீடுகள் எமது ஊரில் இல்லையேன்றே சொல்லலாம். மதில் வீடுகளில் கூட கிணற்றடியைச் சுற்றியாவது பூவரசு நட்டிருப்பார்கள். அம்மரங்களிலிருந்து இடையிடையே நூல் விட்டு இறங்கும் மசுக்குட்டிகள் (மயிர்க்கொட்டிகள்) கூட வாசிப்பின் போது பலதடவைகள் மசமசப்பையும், பயத்தையும் தந்தன.

இப்போது அடுத்த நாவலிலும் அதே பூவரசு சிலாகிக்கப் படுகிறது.
சுள்ளிடும் வெயிலைத் தடுக்க குடை விரித்திருக்கும் பூவரசமர இலைகள். அதன் கீழிருந்து... என்றும், பூவரசம் பூவில் அழகில்லை, மணமில்லை, அளகத்தில் சூட உதவுவதில்லை...
 என்றும் தொடர்கிறது எஸ்போவின் ´தீ`.

Sunday, April 12, 2015

மாதொருபாகன்


ஒரு நாவலை வாசிக்கத் தொடங்கும் போது பெரும்பாலும் சற்று இழுநிலை இருக்கும். சற்றுத்தூரம் போய்விட்டால் நிறுத்த மனம் வராது. பெருமாள் முருகனின் மாதொருபாகன் வாசிக்கத் தொடங்கிய போதும் அப்படியானதொரு நிலை இருந்தது. அதனோடு ஒன்றி விட்ட பின் வாசிக்க நேரம் தேடி மனம் அலைந்த பொழுதுகளும் இருந்தன.

இப்போது வாசித்து முடித்து நாட்களாகி விட்டன. அதன் பின் எத்தனையோ சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்று வாசித்து விட்டேன். ஆனாலும் இன்னும் அந்தக் கதை மாந்தர்களான பொன்னாவும், காளியும் என்னருகிலேயே வாழ்வது போன்றதொரு பிரமையிலிருந்து மீளமுடியவில்லை.

தொண்டுப்பட்டியும், குடைவிரித்து விருச்சமாக விரிந்திருக்கும் பூவரசுவும், திருச்செங்கோடும்... என்று மனசுக்குள் கனவும், நினைவுமான கற்பனை தோய்ந்த ஒரு நிலை. கதை நடந்த அந்தப் பூமிக்கே போய் வந்தது போன்றதொரு உணர்வு.

எத்தனையோ புதியசொற்கள். பொருளே புரியாமல் முதலில் தடுமாறி பின் புரிந்து கொண்ட இடங்கள். யாரிடம் போய் கேட்பது என்று தெரியாத பல கேள்விகள்.

அடுத்தொரு நாவலைத் தொடும் வரை மனசு இதிலிருந்து விடுபடுமா எனத் தெரியவில்லை.

Sunday, March 29, 2015

புரிந்துணர்வு ஒப்பந்தம்

எனக்கும் அவர்களுக்கும்
இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
எனது விட்டுக்கொடுத்தல்களினால்தான்
இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது



29.3.2015
 

Friday, March 27, 2015

பறத்தலுக்கான சுதந்திரம்

சிறகுகளைப் பறித்து
கக்கத்தில் வைத்துக் கொண்டு
பறத்தலுக்கான சுதந்திரம் பற்றி
வாய் ஓயாது
பேசிக் கொண்டே இருக்கிறார்கள்

சந்திரவதனா
27.3.2015

Thursday, March 26, 2015

காகம் வெள்ளை

காகம் வெள்ளை என்கிறார்கள் அவர்கள்
ஒரு தரம் இல்லை கறுப்பு என்றேன்
மறதலித்து காகம் வெள்ளைதான் என்கிறார்கள்
மீண்டும் இல்லை என்றேன்
கோபமாக கடுங்கோபமாக காகம் வெள்ளை என்கிறார்கள்
நான் மௌனமாகி விட்டேன்

இப்போது அவர்கள் நம்புகிறார்கள்
நான் அவர்களை நம்பி விட்டதாக!

சந்திரவதனா 26.3.2015

Sunday, March 08, 2015

Fatou Mandiang Diatta


என்னால் இன்னும் அந்த வலியையும், இரத்தத்தையும் நினைவு படுத்திக் கொள்ள முடிகிறது. எனது அம்மா சொன்னாள் என்னை அழக்கூடாது என்றும், நான் அழுதால் எமது குடும்ப கௌரவத்தில் கறை படிந்து விடும் என்றும்.

ஏறக்குறைய 30 வருடங்களின் முன், அப்போது எனக்கு நான்கு வயதுகள்தான் இருக்கும். ஒரு வயதான பெண் எனது பெண்உறுப்பை வெட்டிச் சிதைத்தாள். மயக்க மருந்து இல்லாமலே அது நடந்நது. அந்த நேரத்தில் நான் எனது இரு உதடுகளையும் இறுக அழுத்திக் கொண்டிருந்தேன்.

எனது பெயர் Fatou(Fatou Mandiang Diatta). நானும் எல்லா சேனேகல் பெண்களையும் போல வெட்டப்பட்டவள் தான். சிறுமிகளுக்கு விருத்தசேதனம் செய்தே ஆக வேண்டும். அப்படித்தான் குர்ஆன் சொல்கிறது. செய்யாவிட்டால் அவர்களுக்கு கணவன் கிடைக்க மாட்டான். ஏனெனில் அவர்கள் தூய்மை அற்றவர்கள். உண்மையற்றவர்கள்.

இப்போது நான் ஒரு முழுமையான பெண் இல்லை. எப்போதும் எதையோ ஒன்றை இழந்தது போலவே நான் உணர்கிறேன். எனது பாடல்கள்தான் என்னை ஆற்றுகின்றன.

செனேகலில் 1982 இல் பிறந்து, 2006 இலிருந்து ஜெர்மனியில் பேர்லினில் வாழும் Fatou Mandiang Diatta இன்று ஒரு ராப் இசைப்பாடகி. தனது கோபங்களையெல்லாம் பாடல்களில் வெளிப்படுத்துகிறாள். தனது பாடல்களாலும், கல்வியாலும் அந்த காட்டுமிராண்டித் தனமான பாரம்பரியத்துக்கு எதிராகப் போரிடும் நோக்குடன் நான்காவது முறையாக தற்போது தனது தாயகத்திற்குத் திரும்பியுள்ளாள்.

(உலக சுகாதார அமைப்பின் தகவலின் படி உலகில் பிறப்புறுப்பு விருத்தசேதனம் என்ற காட்டுமிராண்டித்தனத்தால் 125 மில்லியன் பெண்கள் பாதிக்கப் பட்டுள்ளார்கள்.)

"Ich bin eine Überlebende"


Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite