17 ஆவது ஆண்டில் புலிகளின் குரல்: "வானோசை - 17" கலை, இலக்கியப் போட்டி அறிவிப்பு[வியாழக்கிழமை, 6 செப்ரெம்பர் 2007, 17:54 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலின் 17 ஆவது ஆண்டு நிறைவையொட்டிக் கலை இலக்கியப் போட்டிகள் நடாத்தப்படவுள்ளன.
இது குறித்த விபரம்:தமிழீழத்தில் வாழ்பவர்களுக்கான போட்டி,
புலம்பெயர்ந்து பன்னாடுகளில் வாழ்பவர்களுக்கான போட்டி,
தமிழகத்து தமிழர்களுக்கான போட்டி என மூன்றாக வகுத்துத் தனித்தனிப் போட்டியாக நடாத்தப்படும்.
ஒவ்வொரு போட்டியிலும் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சான்றிதழும், பரிசும் வழங்கப்படும்.
இந்த ஆண்டு வானொலி நாடகம், சிறுகதை, கவிதை ஆகிய துறைகளில் போட்டிகள் நடாத்தப்படவுள்ளன.
ஆக்கங்கள் யாவும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வீச்சாக்கக் கூடியதாகவும், தமிழின மேம்பாடு கருதியதாகவும் அமைய வேண்டும்.
ஆக்கங்கள் எழுதுதாளில் ஒரு பக்கத்தில் மட்டும் எழுதப்பட வேண்டும்.
ஆக்கத்தை எழுது தாளில் கையெழுத்துச் சுவடியாகவோ, தட்டச்சுச் சுவடியாகவோ அனுப்பி வைக்கலாம்.
ஆக்கங்களைச் சுவடியாக்கும் போது பிறமொழிச் சொற்களைத் தவிர்ப்பது சிறப்புக்குரியதாகும்.
போட்டிக்கான ஆக்கங்களை எழுதுபவர்கள் தங்கள் பெயர், முகவரி ஆகியவற்றைத் தனியான தாளில் எழுதிச் சுவடியோடு இணைக்க வேண்டும்.
எந்தப் போட்டிக்கான ஆக்கம் என்பதை மடல் உறையின் மேல் இடப்பக்க மூலையில் குறிப்பிட்டு அனுப்பி வையுங்கள்.
வானொலி நாடகம்:20 நிமிடங்களுக்கு அமைவாக எழுதப்பட வேண்டும்.
எழுதுதாளில் பத்துப் பக்கங்களுக்குக் (10) குறையாமலும்
பன்னிரண்டு (12) பக்கங்களுக்கு மேற்படாமலும் சுவடி அமைய வேண்டும்.
சிறுகதை:
நான்கு (04) பக்கங்களுக்குக் குறையாமலும், ஐந்து (05) பக்கங்களுக்கு மேற்படாமலும் சுவடி அமைய வேண்டும்.
கவிதை:
மூன்று (03) பக்கங்களுக்குக் குறையாமலும், நான்கு (04) பக்கங்களுக்கு மேற்படாமலும் சுவடி அமைய வேண்டும்.
கவிதைகள் மரபுக் கவிதைகளாகவோ, புதுக்கவிதைகளாகவோ அமையலாம்.
ஆக்கங்களை 31.10.2007-க்கு முன் கிடைக்கக் கூடியதாக அனுப்பி வையுங்கள்.போட்டிகளில் கலை இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் பங்குபற்றலாம்.
ஆக்கங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரிகள்:01) புலிகளின்குரல் நிறுவனம்நடுவப்பணியகம்
முதன்மைச்சாலை
கிளிநொச்சி
தமிழீழம்.
02) மின்னஞ்சல் முகவரி: info@pulikalinkural.com