
இப்படியே புத்தகங்களும், வாசிப்பும் என்னோடும், என் வாழ்க்கையோடும் மட்டுமன்றி, என் குடும்பத்தோடும் ஒன்றியிருந்தன.
இப்படியிருக்கையில்தான் அமைதியாயிருந்த எங்கள் குளங்களிலெல்லாம் கல்லெறியப் பட்டது. ஆர்ப்பரித்த பருத்தித்துறைக் கடலின் அலையோசை, சீறி வந்த பீரங்கிக் குண்டுகளுக்குள் அமிழ்ந்து போகத் தொடங்கியது. நெடிதுயர்ந்த பனை உதிர்த்த பனம்பூவை நுகர்ந்தபடி நாம் நடந்த பனங்கூடல் பாதைகளும், அரசு உதிர்த்த இலைகள் சரசரக்க நாம் நடந்த வீதிகளும் சிங்கள எதிரிகளின் பூட்ஸ் கால்களுக்குள் மிதிபடத் தொடங்கின. நாமுண்டு, நம் சொந்தமுண்டு... என்று கூடி வாழ்ந்த நாமெல்லாம் கல்லெறிபட்ட பறவைக் கூட்டங்களாய் சிதறத் தொடங்கினோம். பயமும் ஓட்டமும் வாழ்வாகிப் போக சிறகிழந்த பறவைகளின் சோகம் எங்கள் சொந்தமாகத் தொடங்கியது. உறவுகளை மட்டுமல்ல உடைமைகளையும் இழந்தோம். ஓடி வந்து ஜேர்மனியில் தஞ்சம் கோரிய போது பிரிவு, துயர், தனிமை... இவை தவிர வேறெதுவும் எமக்குச் சொந்தமாக இருக்கவில்லை.
எல்லாவற்றையும் இழந்திருந்தோம். துயர் நிரம்பிய மனசுக்குள் மிதந்து வரும் நினைவுகளை மீட்டி மீட்டி வாழத் தொடங்கினோம்.
ஆரம்பத்தில் மருந்துக்குக் கூடத் தமிழ்புத்தகங்கள் கிடைக்கவில்லை. இங்கு கிடைக்கக் கூடிய தெரியாத பாசையில் இருந்த புரியாத வரிகளை சும்மா சும்மா வாசித்தோம். ஆற்றாத ஒரு கட்டத்தில்தான்
எரிமலை, ஈழநாடு போன்றவற்றின் அறிமுகங்கள் கிடைத்தன. அத்தோடு இந்தியாவிலிருந்து
ஆனந்தவிகடன், குமுதம், அம்புலிமாமா, Chandamama போன்றவற்றையும் சந்தா கட்டிப் பெற்றுக் கொள்ளத் தொடங்கினோம். இவை எங்களுக்கு மட்டுமல்லாமல் எங்கள் குழந்தைகளின் வாசிப்பு அவாவுக்கும் பிரியமான தீனியாகின.
இந்த ஆனந்தவிகடன், குமுதம் போன்றவற்றிலிருந்து நானும் எனது கணவருமாகச் சேர்த்துத் தொகுத்துக் கட்டி வைத்திருக்கும் புத்தகங்கள்.
அரசு மணிமேகலை
பூவே இளம் பூவே
ஆனந்த்புத்தகப் பையில் துப்பாக்கி(1998)
இந்திரா சௌந்தர்ராஜன்
கோட்டைப்புரத்து வீடு (1990)
ரகசியமாக ஒரு ரகசியம்
இந்துமதி
துள்ளுவதோ இளமை(1992)
உத்தமசோழன்
தொலைதூர வெளிச்சம்
கசக்கும் இனிமை(
மினித்தொடர்) 1999
சத்தியப்பிரியன்மறந்து போகுமா ஆசை முகம்(1997)-
ஓவியம்-மாருதி
சு.சமுத்திரம்வாடாமல்லி
சிவசங்கரிஇன்னொருத்தி+இன்னொருத்தி
சுதாங்கன்
அந்தக் கனல் வீசும் நேரம்
சுஜாதாஆ........
பூக்குட்டி(1990)
அனிதாவின் காதல்கள்
புதிய தூண்டில் கதைகள்
புதிய தூண்டில் கதைகள்-2
தீண்டும் இன்பம்(1998)
ஞாநி
வோட்டுச்சாவடி(
மினித்தொடர்) 1999
தவிப்பு
எஸ் எஸ் தென்னரசுசேதுநாட்டுச் செல்லக்கிளி(
சரித்திரத்தொடர்)-1990
தேவிபாலாமடிசார் மாமி
இப்படிக்குத் தென்றல்
பாஸ்கர் சக்திவெயில் நிலவு இரவு (1997)
பட்டுக்கோட்டை பிரபாகர்
மதில் மேல் மனசு(1999)
வெட்டு- குத்து... கண்ணே, காதலி!
தீர்ப்பு தேடி வரும்
பி.வீ.ஆர்
குப்பத்து சாஸ்திரிகள்
மேலாண்மை பொன்னுச்சாமிஅச்சமே நரகம்
மணியன் காதலித்தால் போதுமே
மதுராமஞ்சள் மல்லிகை(
விகடன் இலக்கியப் போட்டியில் 50,000 ரூபா பரிசு பெற்ற குறுநாவல்(1996)
மலரோன்ஆக்ஷன்
ஒற்றையடி காதல் பாதை(
ரீன் ஏஜ் தொடர் 1997)
மெரினா நாடகம் போட்டுப் பார்(
மினித்தொடர்)
ரவிகாந்தன்நகுல்
ரா.கி.ரங்கராஜன்ஸிட்னி ஷெல்டன்(1992)-(
லாராவின் கதை-தமிழில் ரா.கி.ரங்கராஜன்)
நான் கிருஷ்ண தேவராஜன்-1996(
சரித்திரத்தொடர்)
டயானா (
வின் வாழ்க்கை)-1997
இல்லாத கேஸ்(
எக்ஸ்பிரஸ் தொடர்)
ராஜேஸ்குமார்
நீல நிற நிழல்கள்
ஊமத்தம் பூக்கள்(1998)
கவிஞர் வாலி
பாண்டவர் பூமி(புதுக்கவிதையில் மகாபாரதம்)
பாண்டவர் பூமி - பாகம் -2 (புதுக்கவிதையில் மகாபாரதம்)
அவதாரபுருஷன்(புதுக்கவிதையில் இராமாயணம்)
விசு மீண்டும் சாவித்திரி (1993)
விஷ்வக்ஸேனன்பத்மவியூகம்(
சரித்திரத்தொடர்)- 1997
விஜயராணிஅம்பாரிமாளிகை(
விகடன் இலக்கியப் போட்டியில் 1இலட்சம் ரூபா பரிசு பெற்ற சமூகநாவல்(1996) - ஓவியம்-மணியம் செல்வன்)இரா.வேலுச்சாமி
அங்கே பாடறாங்க(
சிறிய தொடர்)
வைரமுத்து
தண்ணீர் தேசம்(கவிதைக்கதை)
ஸ்டெல்லா புரூஸ்அது வேறு மழைக்காலம்
பனங்காட்டு அண்ணாச்சி
மாயநதிகள்
ஜாவர் சீதாராமன்உடல் பொருள் ஆனந்தி
கிரேஸி மோகன்மயங்குகிறாள் ஒரு மாது(
நகைச்சுவை நாடகம்)
மீண்டும் மிஸ்டர் கிச்சா(
நகைச்சுவைக் கட்டுரைகள்)
பிரசன்னா அவன் அது அவர்கள்(
தொடர் நாடகம்)
Dr.சி.எஸ் மோகனவேலுஜேர்மனியை வியக்க வைத்த தமிழ்புயல்அறுசுவை நடராஜன்கல்யாண சமையல் சாதம்சுவாமி சுகபோதானந்தாமனசே ரிலாக்ஸ் பிளீஸ்பல் டாக்டருடன் பத்து நாட்கள்
துன்பமான நேரங்கள் - உறுதியான உள்ளங்கள்ஞாபகப்பெட்டி (படக்கதை)- சித்திரத்தொடர்இதைவிட சிறுகதைகளின் தொகுப்புகள்(25மட்டில்), ஜோக்ஸ் தொகுப்புகள் தனியாக...
2000 இற்குப் பின்னர் கணினியோடு எமது வாழ்வு ஒன்றி விட்டதால் வாசிப்புக்கள் ஓரளவு கணினிக்குள் என்றாகி விட்டன. ஆனந்தவிகடனுக்கும் குமுதத்துக்கும் சந்தா கட்டுவதை நிறுத்தி விட்டோம்.
(தொடரும்)
இவை தவிர்ந்த மற்றைய புத்தகங்களையும் என்னிடமுள்ள ஈழத்து எழுத்தாளர்களின் புத்தகங்களையும் அடுத்த பதிவில் பார்க்கலாம்.